வாய்ப்புண் ஏற்படுவது பொதுவான ஒன்றுதான், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் அடிக்கடி வாய்ப்புண் ஏற்படுவது வழக்கமான ஒன்று. இதுபோன்று வாயில் தோன்றக்கூடிய புண்கள் மிகுந்த வலியை ஏற்படுத்தும், சிலருக்கு வாயை திறந்து பேசமுடியாத அளவுக்கு கூட வாய்ப்புண்களின் விளைவு இருக்கும். வாயின் உள்பக்கம் அல்லது ஈறுகளின் அடிப்பகுதியில் இத்தகைய புண்கள் தோன்றுகின்றது, இதன் காரணமாக சாப்பிடுவது, குடிப்பது போன்றவற்றில் சிரமம் ஏற்படும், ஒருவருடன் பேசுவது கூட நமக்கு அசௌகரியமாக இருக்கும். அதேசமயம் வாய் புண்கள் ஒரு தொற்று நோய் கிடையாது, இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாது என்பதால் பயப்பட வேண்டிய தேவையில்லை, இந்த புண்கள் ஒன்று முதல் இரண்டு வாரங்களில் சரியாகிவிடும்.
மேலும் படிக்க | ஒரே வாரத்தில் கொழுப்பை குறைக்கணுமா? இந்த 4 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க போதும்
ஆனால் சிலருக்கு அடிக்கடி வாய்ப்புண்கள் ஏற்படும், அவ்வாறு அடிக்கடி ஏற்படுவது தீவிர நோயின் அறிகுறிகளாக கூட இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அடிக்கடி வாய்ப்புண் ஏற்பட்டால் உடலின் உள் ஆரோக்கியத்தில் ஏதோ பிரச்சனை உள்ளது என்பதற்கான அறிகுறியாகும், அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி மற்றும் நாள்பட்ட நோய் போன்ற சில தீவிரமான நோயின் காரணமாக கூட இவை உருவாகலாம். வாய்ப்புண் ஏற்படுவதற்கு சில காரணங்கள் உள்ளது, அதாவது பாக்டீரியா ஒவ்வாமை, அமிலத்தன்மை, வைட்டமின்-பி12 குறைபாடு, முறையாக பல் விலக்காமல் இருப்பது அல்லது நீங்கள் பயன்படுத்தும் பற்பசை உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவது, ஆரஞ்சு, அன்னாசி மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற அமில உணவுகளை அதிக அளவில் உட்கொள்ளுதல், மாதவிடாய் காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம், தூக்கமின்மை, வாயில் வைரஸ், பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்று என இப்படி பல்வேறு காரணங்களால் வாய்ப்புண்கள் ஏற்படும்.
வாய்ப்புண்களை சரிசெய்வது எப்படி ?
1) புண் குணமாகும் வரை காரமான மற்றும் புளிப்பு உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
2) பூண்டு, மிளகாய், இஞ்சி சாப்பிடுவதை குறைக்கவும்.
3) வாயை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
4) நிறைய தண்ணீர் குடித்து உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்க வேண்டும்.
5) திரிபலா அல்லது முலேத்தி கலந்து தயாரிக்கப்பட்ட சூடான நீருடன் தொடர்ந்து வாய் கொப்பளிக்கவும். ஒவ்வொரு முறையும் 2-3 நிமிடங்கள் அந்த சூடான நீரை வாயில் வைத்து, ஒரு நாளைக்கு 4-5 முறை கழுவவும்.
6) மஞ்சள் அல்லது அதிமதுரப் பொடியைக் கொண்டு புண்களைச் சுத்தம் செய்யவும்.
7) புண்களுக்கு ஆண்டிசெப்டிக் ஜெல் தடவவும்.
மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ