ஸ்பெஷல் உணவு உளுந்தங்கஞ்சி

Last Updated : Sep 21, 2017, 02:33 PM IST
ஸ்பெஷல் உணவு உளுந்தங்கஞ்சி   title=

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு ஏற்படும் பிரச்சனை முதுகுவலி ஆகும். அதிலும் வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இந்த வலி கட்டாயம் ஏற்படுகிறது. இதனை எப்படி மேற்கொள்வது என்று பார்ப்போம் 

உளுந்தங்கஞ்சி செய்வதற்கு தேவையான பொருட்கள் :

உளுந்து - 1 கப் 
தேங்காய் துருவல்  - தேவைகேற்ப 
கருப்பட்டி - அரை கப் 
சுக்கு தூள் - 1 தேக்கரண்டி 
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி 
தண்ணீர் - 5 கப் 

உளுந்தங்கஞ்சி செய்யும் முறைகள் : உளுந்தை வாணலியில் இட்டு நன்கு வாசனை வரும் வரை வறுத்து சிறிது ஆறவைத்து பொடி செய்து கொள்ளவும். இந்த மாவில் 1 கப் நீர், சிறிது உப்பு கலந்து இட்லி மாவு பதத்திற்கு கரையுங்கள்.

அடிகனமான பாத்திரத்தில் நீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்கும் போது கரைத்து வைத்துள்ள உளுந்து மாவை கலந்து, நன்கு வேகும் வரை கைவிடாமல் கிளறுங்கள். 
மாவு வெந்து வரும்போது பொடித்து வைத்துள்ள கருப்பட்டி, சுக்குத்தூள், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு காய்ச்சி இறக்கி விடவும். பரிமாறும் பொது கஞ்சியில் தேங்காய் துருவலை சேர்த்து பரிமாறவும். 

உளுந்தை கஞ்சியாக தயாரித்து குடித்து வந்தால் ஏற்படும் நன்மைகள் : 

# இது ஊட்டச்சத்து நிறைந்தது, 
# பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை, மாலை கொடுக்கலாம். 
# தசைகள் பலம் பெறும், 
# மெலிந்த குழந்தைகளுக்கு அடிக்கடி இந்த கஞ்சயை தயார் செய்து கொடுங்கள் உடல் பருமன் அடையும். 
# வயதானவர்கள் காலை நேரத்தில் இந்த கஞ்சியை சாப்பிட வேண்டும். 
# இது மலச்சிக்கலை போக்கும்.  
# அலுவலகத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கும் முதுகு வலி அதிகம் ஏற்படும் பொது இக்கஞ்சி நல்ல பலனை தரும். 
# இடுப்பு வலி, மாரடைப்பு போன்றவற்றை தடுக்க உளுந்த கஞ்சி எடுத்து கொள்வது நல்லது. 
# உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றுகிறது. 
# செரிமான அமைப்பை ஆரோக்கியமாகப் பராமரிக்கவும். 

வெறும் கஞ்சி பிடிக்காதவர்கள் இதனுடன் பழத்தை சேர்த்த கொள்ளவும் :  

# உளுந்தங்கஞ்சியில் வாழைப்பழத் துண்டுகள், 
# கட் செய்யப்பட்ட ஆப்பிள் துண்டுகள் மற்றும் மாதுளை முத்துக்களை சேர்த்துக் கொடுத்தால் சுவையும் சத்தும் கூடுதலாகும். 
# இஞ்சியில் வெல்லம் சேர்ப்பதன் மூலம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும். 
# பெரியவர்கள் உளுந்து கஞ்சியில் வெள்ளரித் துண்டுகள், 
# வேக வைத்த பூசணி, கேரட் துண்டுகள் சேர்த்து சாப்பிடும் போது சுவை வேறுபடுவதுடன் எலும்புகள் வலிமை அடைவதற்கான சத்துகள் கிடைக்கும். 
 
உளுந்தின் பெயர்கள் : 

Tamil - Ulundu

English - Blackgram

Mlayalam - Vulunnu

Telugu - Minumu

வெள்ளை உளுந்து, கருப்பு உளுந்து என்று உள்ளன, உளுந்தில் புரதம், மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.

Trending News