Sprite பாட்டில் கலர் மாற்றத்துக்கு பின்னால இத்தனை விஷயமா? அதிர்ச்சியூட்டும் தகவல்

Transparent bottles vs Colored Bottle: ஸ்ப்ரைட் பாட்டிலின் நிறத்தை மாற்ற கோகோ கோலா நிறுவனம் முடிவெடுத்துள்ளது அதற்கு பின் உள்ள காரணம் அதிர்ச்சியூட்டுகிறது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 31, 2022, 08:41 AM IST
  • ஸ்ப்ரைட் பாட்டிலின் நிறம் மாற்றப்படும்
  • கோகோ கோலா நிறுவனம் அறிவிப்பு
  • நிறமற்ற பாட்டில்களில் கிடைக்கும் ஸ்ப்ரைட்
Sprite பாட்டில் கலர் மாற்றத்துக்கு பின்னால இத்தனை விஷயமா? அதிர்ச்சியூட்டும் தகவல் title=

COCA-COLA: ஸ்ப்ரைட் குளிர்பானம் இனி பச்சை நிற பாட்டிலில் வராது. அதற்கு பதிலாக,  வெள்ளை பாட்டிலில் கிடைக்கும், 60 ஆண்டுகளுக்குப் பிறகு நிறுவனம் இந்த முடிவை எடுத்த காரணத்திற்கு பின்னால் இருக்கும் உணை ஆதிர்ச்சியளிக்கிறது. பச்சை நிற பாட்டிலில் விற்கப்பட்டு வித்தியாசத்தை ஏற்படுத்திய ஸ்ப்ரைட், இனி நிறமற்ற பாட்டிலில் கிடைக்கும் என்றும், இந்த மாற்றத்தை ஆகஸ்ட் 1 முதல் அமல்படுத்தவிருப்பதாகவும் கோகோ கோலா நிறுவனம் ஜூலை 27 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது. அமெரிக்க நிறுவனமான கோகோ கோலாவின் இந்த முடிவுக்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா?

சுற்றுச்சூழலை பாதிக்கும் பாட்டில்கள்

பச்சை நிற பாட்டில் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக கோகோ கோலா நிறுவன அதிகாரி தெரிவித்தார். தற்போது, ​​ஸ்ப்ரைட் பாட்டில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக்கின் பெயர் டெர்ரா பிளாட். இந்த பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யலாம் ஆனால் புதிய பாட்டிலாக மீண்டும் வார்க்க முடியாது.

மேலும் படிக்க | Beat The Heat: கோடையையும் காதலிக்க செய்ய இந்த உணவுகள் போதுமே

வண்ண பாட்டில்களை மறுசுழற்சி செய்வது எளிதானது அல்ல. இதனுடன், வண்ண பாட்டில் அதிக மாசுபாட்டையும் பரப்புகிறது. இருப்பினும், அவற்றில் இருந்து ஆடைகள் மற்றும் தரைவிரிப்புகள் தயாரிக்கப்படலாம். அதே நேரத்தில், வண்ணத்தில் உள்ள பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதும் கடினமான பணியாகும்.

வெளிநாட்டில் பச்சை பாட்டில் விற்பனை ஏற்கனவே நிறுத்தப்பட்டது

பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில், 2019 முதல் வெள்ளை நிற பாட்டிலில் ஸ்ப்ரைட் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது உலகம் முழுவதும் வண்ண பாட்டில்களின் பயன்பாட்டை நிறுத்திவிட்டு, நிறமற்ற பாட்டில்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

100 சதவீதம் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக்கில் இருந்து Dasani என்ற பாட்டில் வாட்டர் பிராண்ட் தயாரிக்கப்படும் என்றும் கோகோ கோலா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் 2019 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை விட 20 மில்லியன் பவுண்டுகள் பிளாஸ்டிக் கழிவுகள் குறையும் என்பது அதிர்ச்சித் தரும் செய்தியாக இருக்கிறது. 

புதிய ஸ்ப்ரைட் பாட்டிலில் லெவல் மட்டும் பச்சை நிறத்தில் இருக்கும்

ஸ்ப்ரைட்டில் பச்சை நிற நிலை இருக்கும், அதில் ஸ்ப்ரைட் எழுதப்பட்டு அதன் அட்டையும் பச்சை நிறத்தில் இருக்கும். நிறுவனம் புதிய பேக்கிங் மற்றும் வடிவமைப்புடன் புதிய பாட்டில்களை அறிமுகப்படுத்தும்.

மேலும் படிக்க | இந்த 2 பொருட்கள் உடல் எடையை வேகமாக குறைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News