இத்துணுண்டு ஏலக்காயில் இவ்வளவு விஷயம் இருக்கா... ஆராய்ச்சி சொல்லும் ஆச்சர்ய தகவல்கள்!

Health Benefits Of Cardamom: உடல் எடை குறைப்பது முதல், பசியின்மையை போக்குவது வரை பல்வேறு உடல்நல கோளாறுகளுக்கு ஏலக்காய் சிறந்த தீர்வு என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Aug 12, 2023, 08:50 PM IST
  • அமெரிக்காவில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
  • ஏலக்காயை அந்த ஆராய்ச்சியாளர்கள் சூப்பர் ஃபுட் என்கிறார்கள்.
  • ஏலக்காயை விலங்குகளிடம் கொடுத்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இத்துணுண்டு ஏலக்காயில் இவ்வளவு விஷயம் இருக்கா... ஆராய்ச்சி சொல்லும் ஆச்சர்ய தகவல்கள்! title=

Health Benefits Of Cardamom: உடல் எடையை கட்டுக்கோப்புடன் பராமரிக்கவும், கொழுப்பை குறைக்கவும் படாதபாடுபடுகிறீர்களா... அப்படியென்றால், ஏலக்காய் உங்களுக்கு சிறந்த பலனை தரும் என ஒரு ஆய்வு சொல்கிறது. ஏலக்காயை உட்கொள்வதால் ஏற்படும் பலவிதமான ஆரோக்கியம் மற்றும் உணவுப் பயன்களாக, பசியின்மை, கொழுப்பு இழப்பு மற்றும் உடல் எடையை குறைத்தல் உள்ளிட்ட பலன்களை தரும் என ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்துகிறது. 

ஏலக்காய் உலகின் பல பகுதிகளில் பிரபலமான மசாலா மற்றும் ஒரு சூடான மூலிகை சுவை தரக்கூடியதாகும். யூகலிப்டஸ், புதினா மற்றும் மிளகு ஆகியவற்றைக் கலக்கும் நறுமணத்தைக் அது கொண்டுள்ளது. அந்த வகையில், டெக்சாஸ் A&M காலேஜ் ஆஃப் அக்ரிகல்ச்சர் அண்ட் லைஃப் சயின்சஸ் ஆராய்ச்சியாளர்கள், இந்த ஏலக்காயை "சூப்பர் ஃபுட்" (Super Food) என்று அழைக்கின்றனர்.

"நாங்கள் கண்டறிந்தது என்னவென்றால், இந்த சிறிய மசாலா பொருளான ஏலக்காய் கலோரிகளை எரிக்கவும், பசி மற்றும் உணவு நுகர்வு அதிகரிக்கும் போது உடல் எடையை பராமரிக்கவும் உதவுகிறது" என்று அந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முதன்மை ஆய்வாளர் லூயிஸ் சிஸ்னெரோஸ்-செவல்லோஸ் கூறினார். 

மேலும் படிக்க | 100 கிராம் முள்ளங்கியில் இவ்வளவு ஊட்டச்சதுகளா?சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்

இண்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் மாலிகுலர் சயின்ஸில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, உயிருள்ள விலங்குகளின் மாதிரிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டது மற்றும் வழக்கமான உணவில் பல்வேறு அளவு ஏலக்காய் விதைகளைப் பயன்படுத்தியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏலக்காய் பசியை அதிகரிக்கிறது ஆனால் ஆற்றல் செலவு மற்றும் கொழுப்பு குறைப்பை அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர், என சிஸ்னெரோஸ்-செவல்லோஸ் கூறினார்.

இது மனிதர்களுக்கு 132 பவுண்டுகள் எடையுள்ள வயது வந்தவருக்கு குறைந்தபட்சம் 77 மில்லிகிராம் ஏலக்காய் பயோஆக்டிவ்களை வழங்கியுள்ளது. இந்த நன்மையான அளவை இதில் இருந்து பெறலாம் என்று அவர் கூறினார். 

இந்த ஆய்வு ஒருபுறம் இருந்தாலும், ஏலக்காய் சாப்பிடுவது செரிமான சக்தியை அதிகரிக்கிறது என பொதுவாக கருதப்படுகிறது. இதன் காரணமாக வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை, மலச்சிக்கல், வயிற்றில் எரியும் வாயு மற்றும் வாயு போன்ற பிரச்சனைகளும் நீங்கும். செரிமான சக்தி அதிகரிப்பதால், கொழுப்பை எரிப்பது எளிதாகி, படிப்படியாக எடை குறையத் தொடங்குகிறது என்பதும் பொதுவாக தகவலாக உள்ளது. தினமும் ஒன்று அல்லது இரண்டு சிறிய ஏலக்காயை பச்சையாக சாப்பிட்டு வந்தால், கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவும் எனவும் கூறப்படுகிறது.

அந்த வகையில், அமெரிக்காவில் இருந்து வெளிவந்துள்ள ஆய்வும், வீட்டு வைத்திய தகவல்களும் ஒரளவுக்கு ஒத்துப்போகிறது. மேலும், ஏலக்காய் என்பது விலை மதிப்பானது என்றாலும், அனைத்து தரப்பினாலும் சிறிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தினசரி ஒரு கிளாஸ் பாலில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு ஏன் சாப்பிட வேண்டும்? 5 காரணங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News