கொலஸ்ட்ரால் அதிகரித்து விட்டது என்பதை உணர்த்தும் 5 எச்சரிக்கை அறிகுறிகள்

கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான பல அறிகுறிகள் இருந்தாலும், புறக்கணிக்கக் கூடாத ஐந்து எச்சரிக்கை அறிகுறிகளை பற்றி இன்று நாம் இங்கு காண உள்ளோம். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 13, 2022, 02:20 PM IST
  • கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால் பிபி ஏற்படும்
  • அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கான அறிகுறிகள்
  • கொலஸ்ட்ரால் அதிகரித்தால் கவலை வேண்டாம்
கொலஸ்ட்ரால் அதிகரித்து விட்டது என்பதை உணர்த்தும் 5 எச்சரிக்கை அறிகுறிகள் title=

பொதுவாக ஒரு நோயின் தீவிரமான வடிவத்தையும் எடுப்பதற்கு முன், உங்கள் உடல் நிச்சயமாக சில அறிகுறிகளை காட்டும். அதன்படி கொலஸ்ட்ராலிலும் இதேதான் நடக்கும். உங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, ​​பல அறிகுறிகளை நீங்கள் உணர்வீர்கள். சிலர் அதை லேசாக எடுத்துக்கொள்கிறார்கள், அதுவே சிலர் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள். எனவே அத்தகைய அறிகுறிகளை நாம் தொடர்ந்து புறக்கணித்து வந்தால், மாரடைப்பு போன்ற கடுமையான நோயை சந்திக்க நேரிடலாம். அதுமட்டுமின்றி கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால் பிபி பிரச்சனையும் அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், புறக்கணிக்கக் கூடாத ஐந்து எச்சரிக்கை அறிகுறிகளை பற்றி இன்று நாம் இங்கு காண உள்ளோம். 

1. நெஞ்சு வலி
உங்களுக்கு அடிக்கடி நெஞ்சு வலி இருந்தால், அதை அலச்சியப்படுத்த வேண்டாம். இது அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கூடும். நீங்கள் சரியான நேரத்தில் மருத்துவரை அணுகவில்லை என்றால், இந்த பிரச்சனை மேலும் அதிகரிக்கலாம்.

மேலும் படிக்க | இந்த வகை உணவுகள் சர்க்கரை நோய் அளவை கட்டுப்படுத்த உதவும் 

2. அளவிற்கு அதிகமாக சோர்வாக இருப்பது
சுறுசுறுப்பான வாழ்க்கை மற்றும் வேலை அழுத்தத்தால் சோர்வடைவது தவிர்க்க முடியாதது என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் சில நேரங்களில் ஓய்வு எடுத்தப்பிறகும் இந்த சோர்வு நீங்குவதில்லை. எனவே இந்த அறிகுறியை நீங்கள் எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இதுபோன்ற பிரச்சனை தொடர்ந்து ஏற்பட்டால், மருத்துவரை அணுக வேண்டும்.

3. கழுத்து வலி
ஒரு நபர் 9 முதல் 12 மணி நேரம் வேலை செய்யும் போது கழுத்து வலி ஏற்பட ஆரம்பமாகிறது. இந்த வலி தொடர்ந்து ஏற்பட்டால் உங்கள் மருத்துவரிடம் கட்டாயம் ஆலோசிக்கவும்.

4. கை கால்களில் உணர்வின்மை
பல நேரங்களில், உட்கார்ந்திருக்கும் போது உங்கள் கைகள் மற்றும் கால்கள் மரத்துப் போகும். சிலர் அதை இலகுவாக எடுத்துக்கொள்கிறார்கள், இது பிற் காலத்தில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், இந்த பிரச்சனை அதிகரிக்கும் முன் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

5. வெளிரிய நகங்கள்
கொலஸ்ட்ரால் படிமங்கள் நமது ரத்த நாளங்களில் உறையும்போது உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் சீரான ரத்த ஓட்டம் கிடைக்காமல் போகிறது. அத்தஜ்கைய சூழலில், நமது நகம் வெளிரிய தோற்றத்தில் காணப்படும். நகங்களில் மிக அடர்த்தியான சிவப்பு அல்லது ரெட்டிஷ் பிரவுன் நிறத்தில் கோடுகள் காணப்படும்.

எந்த உணவில் இருந்து விலகி இருக்க வேண்டும்
* முட்டையின் மஞ்சள் கரு
* வெண்ணெயில் அதிக கொலஸ்ட்ரால் உள்ளது
* இறாலில் அதிக கொலஸ்ட்ரால் உள்ளது
* கோழியிலும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளது
* பன்னீரை குறைந்த அளவில் சாப்பிடுங்கள்

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலுன் படிக்க | கோடையில் திராட்சை அளிக்கும் அற்புத நன்மைகள்: பல வித நோய்களுக்கு ஒரே நிவாரணம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News