எடை இழப்புக்கான உணவுகள்: உடல் எடை அதிகரிப்பது நம்மில் பலருக்கு உள்ள மாபெரும் பிரச்சனையாக உள்ளது. இதை எப்படி கட்டுப்படுத்துவது? உணவில் எந்த விதமான மாற்றங்களை செய்வது? இப்படி பல கேள்விகள் நம் மனதில் இருந்துகொண்டே இருக்கின்றன. ஆரோக்கியமான உணவுமுறை உடல் எடையைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. ஆனால் ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவது பலருக்கு மிக கடினமாக இருக்கிறது. ஏனெனில் பலரால் உணவை கட்டுப்படுத்த முடிவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு உடல் எடையை குறைப்பது ஒரு சவாலாகவே தெரிகிறது. அதிக சிரமம் இல்லாமல் உடல் எடையை குறைக்கும் ஒரு எளிய, இயற்கையான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடல் எடையை குறைக்கும் கற்றாழை சாறு:
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு கற்றாழை பல வழிகளில் உதவியாக இருக்கும். உண்மையில், கற்றாழை அதாவது அலோ வேரா ஜெல் கொழுப்பை எரிக்க உதவுகிறது. இது வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பின் துகள்களைப் பிடித்து நீரின் உதவியுடன் வெளியே கொண்டுவருகிறது. இது தவிர, உடலில் நீரேற்றத்தை அதிகரிக்கவும் இது பெருமளவில் உதவியாக இருக்கிறது. கற்றாழை இந்த வகையில் எடை இழப்புக்கு உதவுகிறது. கற்றாழையில் இருந்து தயாரிக்கப்படும் இந்த 3 பானங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இவை உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை எரிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எடை இழப்புக்கு கற்றாழை சாறு தயாரிப்பது எப்படி என்பதை இங்கே காணலாம்:
1. நெல்லிக்காய் அலோ வேரா ஜூஸ் குடிக்கவும்
நெல்லிக்காய் மற்றும் கற்றாழை சாறு விரைவான எடை இழப்புக்கு உதவும். முதன்மையாக, இது கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. நெல்லிக்காய் உடலுக்குத் தேவையன வெப்பத்தை உருவாக்குகிறது. மேலும் கற்றாழை வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. இந்த ஜூஸ் செய்ய, 2 டீஸ்பூன் நெல்லிக்காய் தூள் அல்லது சாறு மற்றும் புதிய கற்றாழை ஜெல் ஆகியவற்றை 1 கிளாஸ் தண்ணீரில் கலக்கவும். இவற்றை நன்றாக கலந்து உட்கொள்ளவும்.
மேலும் படிக்க | நரை முடி கருப்பாக மாற இதை மட்டும் பண்ணுங்கள்: நிரந்தர தீர்வு கிடைக்கும்
2. ஆப்பிள் சைடர் அலோ வேரா ஜூஸ்
ஆப்பிள் சீடர் கற்றாழை சாறு குடிப்பதால் நம் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. இதற்கு, ஆப்பிள் சைடர் வினிகரில் சிறிது தண்ணீர் கலந்து, பின்னர் அதில் கற்றாழை சாறு சேர்க்கவும். இரண்டையும் கலந்து குடிக்கவும்.
3. சியா விதைகள் அலோ வேரா சாறு
சியா விதைகளுடன் கற்றாழை சாறு கலந்து குடிப்பது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதற்கு, கற்றாழை சாற்றில் சியா விதைகளை ஊற வைக்கவும். அரை மணி நேரம் கழித்து அதில் தண்ணீர் மற்றும் தேன் சேர்க்கவும். பின்னர் அதை பருகவும்.
எடை இழப்புக்கு கற்றாழை சாறு குடிக்க சிறந்த நேரம் எது?
எடை இழப்புக்கு கற்றாழை சாற்றை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்த நேரமாக இருக்கும். இரண்டாவதாக, இரவு உணவிற்கு முன்பும் இதை சாப்பிடலாம். இந்த சாறு பசியை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி உடல் எடையை குறைக்கவும் உதவும்.
கற்றாழையின் பிற நன்மைகள்:
கற்றாழையில் என்சைம்கள் உள்ளன. அவை உணவை உடைக்கவும், ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தவும் உதவுகின்றன. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. அலோ வேராவில் பாலிசாக்கரைடுகள் உள்ளன. இவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உள்ளது. இந்த பாலிசாக்கரைடுகள் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்க உதவுகின்றன., அவை தொற்று மற்றும் நோயை எதிர்த்துப் போராடுவதற்கு அவசியமானவை.
மேலும் படிக்க | சூரியகாந்தி விதையில் ஒளிந்திருக்கும் அற்புத நன்மைகள்... பெண்களுக்கு மிக அவசியம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ