நரை முடியை தடுப்பது எப்படி: இன்றைய காலகட்டத்தில், மோசமான வாழ்க்கை முறை, உணவு மற்றும் மாசு ஆகியவை நம் தலைமுடியை சேதப்படுத்தி விடுகிறது. இதன் காரணமாக முன்கூட்டியே முடி நரைப்பது மற்றும் முடி உதிர்தல் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. அதுவும் சீட்டு வயதில் ஏற்படும் நரை முடி பிரச்சனையால் இளைஞர்கள் பதட்டத்தை உணர்கின்றனர். இதனால் பல நேரங்களில் சங்கடத்தையும் குறைந்த நம்பிக்கையையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதற்குப் பின்னால் மரபணு காரணங்கள் கூட இருக்கலாம், ஆனால் பெரும்பாலோருக்கு ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் குழப்பமான வாழ்க்கை முறை தான் முக்கிய காரணமாகும். அத்தகைய சூழ்நிலையில் புதிய நரை முடி வருவதைத் தடுப்பது மிகவும் சாத்தியம் விஷயம் தான் என்றாலும், இதற்கு நீங்கள் தினசரி வழக்கத்தில் சிறிது மாற்றங்களை செய்ய வேண்டும்.
வெள்ளை முடியை தடுக்க இதை செய்தால் போதும்
1. ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள்
இளம் வயதியிலேயே வெள்ளை முடி தோன்ற ஆரம்பித்தால், உங்கள் தினசரி உணவு ஆரோக்கியமாக இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதற்கு, சுத்தமான, ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை உண்ணத் தொடங்குங்கள். மேலும் புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்ளுங்கள், இதனால் உங்கள் தலைமுடிக்கு தேவையான அனைத்து வகையான ஊட்டச் சத்துகளையும் பெற உதவும். அதிபோல் தினமும் ஒரு கைப்பிடி விதைகள் மற்றும் நட்ஸ் சாப்பிடுங்கள். இது தவிர, க்ரீன் டீ, ஆலிவ் ஆயில், மீன், ஆரஞ்சு போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த எளிய வழிமுறைகள் மூலம் முடி நரைப்பதை முன்கூட்டியே தடுக்கலாம்.
மேலும் படிக்க | உடல் எடை எகிறுதா? இப்படி பண்ணி பாருங்க.. ஜிம் போகாமலேயே ஜம்முனு குறைக்கலாம்!!
2. புகைபிடிப்பதை நிறுத்துங்கள்
புகைபிடிப்பதால் உங்கள் உடலில் ஏற்படும் தீமைகள் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை, பொதுவாக அது நுரையீரலுக்கு மட்டுமே தீங்கு விளைவிக்கும் என்று நாம் நினைக்கிறோம், ஆனால் அது நம் தலைமுடிக்கும் நல்லதல்ல. எனவே, நரை முடி பரவுவதைத் தடுக்க எளிதான வழி, சிகரெட்டை அதன் அசல் இடத்தில், அதாவது குப்பைத் தொட்டியில் வீசுவது தான் ஒரே தீர்வாகும். இந்த வழிமுறைகளை நீங்கள் மேற்கொண்டால், உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தில் பெரிய வித்தியாசத்தைக் காண்பீர்கள்.
3. முடி சேதத்தை தடுக்கவும்
முடி சேதம், இது முக்கியமாக சுற்றுச்சூழலில் உள்ள மாசுபாடுகளால் ஏற்படுகிறது, ஆனால் இதைத் தவிர்க்க, நீங்கள் இரசாயன மற்றும் வெப்ப வெளிப்பாடுகளிலிருந்தும் விலகி இருக்க வேண்டும். குறிப்பாக வலுவான சூரிய ஒளி உங்கள் முடியின் ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான விளைவைத் தரும். பல இரசாயன அடிப்படையிலான முடி தயாரிப்புகளும் முடி சேதத்திற்கு காரணமாகின்றன.
4. டென்ஷன் ஆவதை தவிர்க்கவும்
சிறு வயதிலேயே முடி வெள்ளையாகாமல் இருக்க வேண்டும் என்றால், உங்கள் வாழ்க்கையில் இருந்து டென்ஷனை தவிர்க்கவும், ஏனென்றால் முடி வெள்ளையாக மாற மன அழுத்தம் ஒரு முக்கிய காரணமாகும். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முயற்சிப்பது நல்லது, ஏனென்றால் மனச்சோர்வு பல நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | உடல் இளைக்கும் இலட்சியத்தில் வெற்றிப் பெறுவதைத் தடுக்கும் பொதுவான தவறுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ