உடல் பருமனை தடுக்க அலுவலகம் செல்பவர்களுக்கான ஸ்பெஷல் உணவு குறிப்பு

Manage Obesity: அலுவலகம் செல்லும் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் இவை.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 10, 2022, 08:54 PM IST
  • உடல் எடையை கூட்டாமல் உணவைக் குறைக்காமல் ஒல்லியாக குறைக்க வழிமுறைகள்
  • உணவு பழக்கங்களால் உடல் குண்டாகாமல் தடுக்கலாம்
  • வாழ்க்கை முறையில் சில விஷயங்களை கண்டிப்பாக பின்பற்றினால் உடல் எடை குறையும்
உடல் பருமனை தடுக்க அலுவலகம் செல்பவர்களுக்கான ஸ்பெஷல் உணவு குறிப்பு title=

புதுடெல்லி: வேகமான வாழ்க்கை வாழும்போது நாம்,நம் ஆரோக்கியத்தைப் புறக்கணிக்கிறோம். பெரும்பாலான மக்கள் நாம் சாப்பிடும் சாலையோர உணவுகள் மற்றும் துரித உணவுகளின் விளைவுகள் ஆரோக்கியத்தில் பிரதிபலிக்கிறது.

குறிப்பாக அலுவலகத்திற்குச் செல்பவர்கள் நேரமின்மை காரணமாக அவர்களுக்கு வசதியான உணவுப்பழக்கதை பின்பற்றுகின்றனர். அவர்களுக்கான சில ஆரோக்கியமான உணவு விருப்பங்கள் இவை

தண்ணீர் குடிக்கவும் மற்றும் கனமான உணவைத் தவிர்க்கவும்

தண்ணீர் மிகவும் எளிதாகக் கிடைக்கும் என்பதோடு விரைவாக கலோரிகளை எரிக்க உதவுகிறது. எனவே சீரான இடைவெளியில் சுத்தமான தண்ணீரைக் குடிப்பது முக்கியம்.

சுவையான உணவை அல்ல, ஊட்டச்சத்து மதிப்பும் கொண்ட உணவை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்ய வேண்டும். அலுவலக கேண்டீனில் இருந்து சாப்பிட முடிவு செய்தால், கனமான உணவை உண்ண வேண்டாம். பல மணி நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால் செரிமானமாவது குறைகிறது.

பழங்களை எடுத்துச் செல்லுங்கள்

பழங்களை விரும்பி உண்பவராக இருந்தால், ஆரஞ்சு, கொய்யா, திராட்சைப்பழம் அல்லது பெர்ரி பழங்கள் போன்ற வைட்டமின் சி நிறைந்த ஒரு பழம் அல்லது பழச்சாறு எடுத்துச் செல்லுங்கள்.

முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி அல்லது பச்சை பீன்ஸ் போன்ற காய்கறிகளும் ஆரோக்கியத்திற்கு நல்லது. நீங்கள் சோர்வாக உணர்கிறீர்களா? மனச்சோர்வு அல்லது எரிச்சலால் அவதிப்பட்டால், சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளான அரிசி, பாஸ்தா, வெள்ளை ரொட்டி மற்றும் பிற பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும்.

இவை குறைவான ஊட்டச்சத்துக்களைக் கொண்டவை. இவற்றை தவிர்த்து, நமது மனநிலையை மேம்படுத்த உதவும், பச்சைக் காய்கறிகள், பழங்களை சாப்பிடவும். வால்நட் மற்றும் ஆப்பிள்களும் புத்துணர்ச்சியூட்டும் பழங்கள் ஆகும், இவைசோம்பல் மற்றும் மனநிலைக் கோளாறுகளை எதிர்த்துப் போராட உதவும்.

சோம்பலாக உணர்கிறீர்களா? எலுமிச்சை பழத்தை முயற்சிக்கவும். எலுமிச்சம்பழம் அற்புதங்களைச் செய்து உங்களை புத்துணர்ச்சியுடனும், உற்சாகத்துடனும் உணர வைக்கும்.

மேலும் படிக்க | இரவு தூங்கும் முன் இந்த 4 உணவுகளை சாப்பிட்டால் தொப்பை கரையும்

அலுவலகம் செல்பவர்கள் எந்த ஷிப்டில் வேலை செய்தாலும் காலை உணவை தவிர்க்கக்கூடாது. எடை அதிகரிப்பு தரும் உணவுகளையும் தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள், தானியங்கள் மற்றும் தானியங்களை சாப்பிட வேண்டும். கொழுப்பு இல்லாத பால் மற்றும் பால் பொருட்களை குடிப்பது நல்லது.

வாழைப்பழம் மற்றும் பருப்பு வகைகளை சாப்பிடுங்கள். தினமும் ஒரு வாழைப்பழம் ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. இது நமது மனதின் அமைதியை அதிகரிக்கவும் நினைவாற்றலைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

தானியத்துடன் பருப்பு வகைகளை சாப்பிடுவது மதிய உணவிற்கு அதிக புரதம் கொடுப்பதை உறுதி செய்கிறது. எடை அதிகரிப்பதைத் தவிர்க்க புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் லேசான மதிய உணவை உண்ண வேண்டும். விரைவான செரிமானத்திற்கு உகந்த உணவுகளையே உண்ணுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | வெயிலால் சரும அழகில் பாதிப்பா: இந்த வீட்டு வைத்தியங்கள் இருக்க கவலை ஏன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News