நரை முடியை விரட்ட அற்புதமான இயற்கை வீட்டு வைத்தியம்

இன்று நாம் வெள்ளை முடி பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கான வீட்டு வைத்தியத்தை கொண்டு வந்துள்ளோம், இது உங்கள் பிரச்சனையை வேரிலிருந்தே குணப்படுத்த முடியும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 24, 2022, 12:08 PM IST
  • நரை முடிக்கு வெந்தயம் நிரந்திர தீர்வு
  • சிறு வயதிலேயே முடி நரைக்க டென்ஷன் ஒரு முக்கிய காரணம்
  • நெல்லிக்காய் முடியை கருப்பாக்கும்
நரை முடியை விரட்ட அற்புதமான இயற்கை வீட்டு வைத்தியம் title=

மாறிவரும் வாழ்க்கை முறையால், பெரும்பாலான மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். வெள்ளை முடி பிரச்சனையும் இதில் அடங்கும். உடலில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததால், பெரும்பாலான மக்கள் வெள்ளை முடி பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இதில் சிலருக்கு சிறு வயதிலேயே முடி நரைத்துவிடுகிறது. 

இந்த நிலையில் சிறு வயதிலேயே முடி நரைக்க டென்ஷன் ஒரு முக்கிய காரணமாகிறது. இதனை சரி செய்ய விலையுயர்ந்த பொருட்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை, மாறாக, சமையலறையில் இருக்கும் பொருட்களின் மூலம் இயற்கையாகவே வெள்ளை முடியை கருப்பாக்க முடியும். 

மேலும் படிக்க | வாழைப்பழத்தின் உதவியுடன் முடிக்கு கெரட்டின் கிரீம் தயாரிக்கலாம்

பொதுவாக நரைமுடி வருவதற்கு மருத்துவரீதியாக முன்மையான காரணம் என்னவென்றால், முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது தான். இந்த மெலனினானது வயதாகும் போது தான் ஏற்படும். ஆனல் தற்போது இந்த மெலனின் சிறு வயதினருக்கே குறைய ஆரம்பித்து நரைமுடியை ஏற்படுத்திவிடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் நரை முடியை கருமையாக்குவதற்கு சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன, அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வோம்.

நரை முடிக்கு வெந்தயம் நிரந்திர தீர்வு
வெந்தயத்தில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன, இது முடியை கருமையாக்கும். வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, பின் அரைத்து, தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் கலந்து மசாஜ் செய்யவும். இப்படி செய்தால், சில நாட்களில் உங்கள் தலைமுடி கருப்பாக ம்ாறும்.

நெல்லிக்காய் முடியை கருப்பாக்கும்
நெல்லிக்காய் வெள்ளை முடியை கருப்பாக மாற்றும். உண்மையில், நெல்லிக்காய் முடியை கருமையாக வைத்திருக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது தவிர நெல்லிக்காயில் மருதாணி சேர்த்து தடவினால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.

கருஞ்சீரகம் மற்றும் ஆலிவ் எண்ணெய்
1 தேக்கரண்டி கருஞ்சீரகத்தில் 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை கலக்கவும். இப்போது முடியின் வேர்களில் மசாஜ் செய்யவும், பின்னர் 1 மணி நேரம் கழித்து ஷாம்பு செய்யவும். வாரம் ஒருமுறை இப்படி செய்து வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

மருதாணி மற்றும் தேங்காய் எண்ணெய்
4 ஸ்பூன் தேங்காய் எண்ணெயைக் கொதிக்க வைத்து அதில் மருதாணி இலைகளைப் போடவும். மருதாணியின் நிறம் எண்ணெயில் வர ஆரம்பித்ததும், கேஸ்ஸை அனைக்கவும். இந்த எண்ணையை தலைமுடியில் தடவி மசாஜ் செய்யவும். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு செய்யவும்.

கறிவேப்பிலை
கறிவேப்பிலையில் உயிர்-செயலில் உள்ள பொருட்கள் உள்ளன, இது முடிக்கு முழு ஊட்டச்சத்தை அளிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், அதன் பேஸ்ட்டை தலைமுடியில் தடவினால் நரை முடியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். 

(பொறூப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ தமிழ் நியூஸ் இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News