ஜெனிவா: குரங்கு காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசிகள் 100 சதவீதம் செயல்திறன் கொண்டதாக இருக்காது, எனவே, இந்த நோய்த்தொற்றின் அபாயங்களை கவனமாக கையாள வேண்டும் என்று WHO தொழில்நுட்ப தலைவர் ரோசாமண்ட் லூயிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். குரங்கம்மை நோய் குறித்து புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 17) பேசிய அவர், குரங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் 100 சதவீதம் செயல்திறன் கொண்டவை அல்ல என்பதை கருத்தில் கொண்டு செயலாற்ற வேண்டிய கட்டாயத்தில் உலகம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். உலகளவில் 92 க்கும் மேற்பட்ட நாடுகளில்ல் 35,000 க்கும் அதிகமானவர்களுக்கு குரங்கு காய்ச்சல் அறிகுறிகள் பதிவாகியுள்ளன. .
செய்தியாளர் சந்திப்பில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப தலைவர் லூயிஸ், குரங்கு அம்மை காய்ச்சலைத் தடுப்பதற்கான தடுப்பூசிகள் "100 சதவீத செயல்திறன் கொண்டவையாக இருக்கும் என WHO எதிர்பார்க்கவில்லை" என்று குறிப்பிட்டார்.
மேலும் படிக்க | மனிதனிடம் இருந்து விலங்குகளுக்கு பரவும் குரங்கம்மை நோய்
“எங்களிடம் துல்லியமான தரவு இல்லை… தடுப்பூசி என்பது தோட்டாவை தடுக்கும் தடுப்புக் கவசம் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டிருந்தாலும் நோய்த்தொற்று ஏற்படலாம் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.
குரங்கம்மை நோய் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், 35,000 க்கும் மேற்பட்ட குரங்கும்மை நோய் பாதித்தவர்கள் 92 நாடுகளில் இருக்கின்றனர் என்றும், குரங்கம்மைக்கு 12 பேர் பலியாகியுள்ளனர் என்றும் தெரிவித்த்தார்,
கடந்த வாரம் சுமார் 7,500 வழக்குகள் பதிவாகியுள்ளன, இது முந்தைய வாரத்தை விட 20% அதிகமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அதிக அளவில் பதிவாகியுள்ள இந்த தொற்றில், ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.
பெரும்பாலான நபர்கள் குரங்கு காய்ச்சலில் இருந்து சில வாரங்களுக்குள் குணமடைகின்றனர். இந்த நோய்க்கான ஆரம்பகட்ட அறிகுறிகள், காய்ச்சல், குளிர் மற்றும் வீக்கம் என்று இருக்கும். அதோடு, தோலில் புண், சொறி ஆகியவையும் ஏற்படுகின்றன.
மேலும் படிக்க | சீனாவை தாக்கும் புதிய வைரஸ் தொற்று: லாங்யா நோய்த்தொற்றின் அறிகுறிகள்
இளைஞர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களில் இந்த நோய் மிகவும் தீவிரமானதாக இருக்கலாம். குரங்கு பாக்ஸ் வைரஸ் அசுத்தமான சூழ்நிலை மற்றும் நேரடி தொடர்பு மூலம் அதிகமாக ரவுகிறது.
சேதமடைந்த துளைகள் மற்றும் தோல், சுவாசக்குழாய், கண்கள், நாசி மற்றும் வாய், மற்றும் உடல் திரவங்கள் மூலம் வைரஸ் மனித உடலமைப்பில் நுழைய முடியும். குரங்கு என்பது ஜூனோடிக் நோய். இது கொறித்துண்ணிகள் மற்றும் விலங்குகளில் உருவாகிறது.
மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் தொலைதூரப் பகுதிகளில் மட்டுமே உருவான இந்த நோய்த்தொற்று தற்போது ஐரோப்பாவில் அதிக அளவில் பரவி வருகிறது.
மேலும் படிக்க | இந்தியாவின் முதல் குரங்கு அம்மை நோயாளி டிஸ்சார்ஜ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ