World Liver Day: கல்லீரல் நமது உடலில் மிகவும் சுறுசுறுப்பான உறுப்பு. கல்லீரலின் அளவு பெரியது, தன்னை தானே சீர் செய்து கொள்ளும் செய்யும் திறன் கொண்டது. உடலில் சேரும் நச்சுகளை வடிகட்டுவது முதல் ஊட்டச்சத்துக்களை உணவில் இருந்து பிரித்து உடலுக்கு அளிப்பது, உணவை ஜீரணிக்கும் பித்த புரதங்களின் உற்பத்தி ஆகியவற்றை செய்வதோடு, நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சிவப்பணுக்களின் உருவாவதற்கும் உதவுகிறது. இந்நிலையில், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிக அவசியம். இன்றைய வாழ்க்கைமுறை காரணமாக, கொழுப்பு கல்லீரல், கல்லீரல் அழற்சி மற்றும் கல்லீரல் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளை மக்கள் எதிர்கொள்கின்றனர்.
இன்றைய உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். குறிப்பாக உங்கள் உணவுமுறை கல்லீரலை நோயுறச் செய்கிறது. கல்லீரல் ஆரோக்கியம் என்பது இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற உடலின் மற்ற உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கும் அவசியம். கல்லீரல் நோய் ஏற்பட்டால், நோயெதிர்ப்பு அமைப்பு பெரிதும் பாதிக்கப்படும். உடலில் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரித்து நோய்கள் தாக்குகின்றன.
கல்லீரலின் முக்கியத்துவம்
மோசமான வாழ்க்கை முறை கல்லீரலை நோயுறச் செய்கிறது. பாதிக்கப்பட்ட கல்லீரல் உடலுக்கு 100 வகை நோய்களைக் ஏற்படுத்துகிறது. உடலில் உள்ள உணவை ஜீரணிக்கவும், நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடவும், சர்க்கரையை கட்டுப்படுத்தவும், உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும் கல்லீரல் செயல்படுகிறது. கல்லீரல் உடலில் புரதங்களை உற்பத்தி செய்வதோடு, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை சேமித்து வைக்கிறது. ஆரோக்கியமாக இருக்க நம் உடல் செய்யும் அனைத்து செயல்பாடுகளும் கல்லீரலால் இயக்கப்படுகின்றன.
கல்லீரல் பாதிக்கும் நோய்கள்:
கொழுப்பு கல்லீரல்
கல்லீரல் அழற்சி
மஞ்சள் காமாலை
ஹெபடைடிஸ்
கல்லீரல் செயலிழப்பு
கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள்
சிறுநீர் மஞ்சள் நிறமத்தில் இருத்தல்
அளவிற்கு அதிகமானசோர்வு
அடிக்கடி ஏற்படும் வயிற்று வலி
வாந்தி
கண்கள் மஞ்சள் நிறத்தில் இருத்தல்
வெளிறிய தோல்
பசியின்மை
கல்லீரல் செய்யும் வேலைகள்
உடலில் உள்ள நச்சுக்களை வடிகட்டி எடுத்து வெளியேற்றுதல்
உணவை ஜீரணிக்க செய்தல்
தொற்றுநோயை எதிர்த்துப் போராடுதல்
சர்க்கரையை கட்டுப்படுத்துதக்
புரதத்தை உருவாக்குதல்
உணவில் உள்ள ஊட்டச்சத்தை உடலில் சேர்த்தல்
இரத்தத்தை சுத்தம் செய்தல்
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துதல்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்
கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் உணவு பழக்கங்கள்
எண்ணெயில் பொரித்த உணவு
மசாலா அதிகம் சேர்த்த உணவு
கொழுப்பு உணவுகள்
குப்பை உணவு
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை
மது
கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி
கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க வேண்டும். உணவு விஷயத்தில், குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்ள வேண்டாம். தாவரங்களிலிருந்து கிடைக்கும் பிரெஷ்ஷான உணவை உண்ணுங்கள். கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உடல் பருமனை குறைப்பது மிக அவசியம். தூங்கும் நேரத்தையும், எழுந்திருக்கும் நேரத்தையும், சாப்பிடும் நேரத்தையும் நிர்ணயித்து அதனை பின்பற்றவும். அதிக எண்ணெய் மற்றும் காரமான உணவுகளை சாப்பிட வேண்டாம். கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும். இவை அனைத்தும் கல்லீரலுக்கு ஆபத்தானவை.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Weight Loss Drinks: ஓவரா எகிறும் உடல் எடை குறையணுமா? அப்போ இந்த ஜூஸ்களை குடிங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ