"I am back" கார்த்தி சிதம்பரத்தின் மகிழ்ச்சி ட்விட்!

தான் வெளியே வந்த மகிழ்ச்சியினை பகிர்ந்துக் கொள்ளும் வகையில் கார்த்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் "Vanakam, Hello, Hola, Howdy folks. I am back.." என பதிவிட்டுள்ளார்.

Last Updated : Mar 24, 2018, 08:29 PM IST
"I am back" கார்த்தி சிதம்பரத்தின் மகிழ்ச்சி ட்விட்! title=

INX மீடியா முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறையின் வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டததை அடுத்து அவரை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யலாம் என பேசப்பட்டது. 

இதனையடுத்து, தன்னை கைது செய்யாமல் இருக்க டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவினை விசாரித்த நீதிபதி வரும் ஏப்ரல் 16-ஆம் நாள் வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டார். மேலும் விசாரணை அதிகாரிகள் அழைக்கும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், வழக்கின் அடுத்த விசாரணையை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து தான் வெளியே வந்த மகிழ்ச்சியினை பகிர்ந்துக் கொள்ளும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் "Vanakam, Hello, Hola, Howdy folks. I am back.." என பதிவிட்டுள்ளார்.

INX மீடியா நிறுவனத்திற்கு அந்நிய முதலீடுக்கான அனுமதியை முறைகேடாக பெற்றுத்தர உதவியதாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கடந்த பிப்., 28-ம் தேதி காலை சென்னை விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

 

பின்னர் டெல்லி அழைத்து செல்லப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார். கிட்டத்தட்ட 15 நாட்கள் அவரிடம் விசாரணை நடத்தியது சிபிஐ. நேற்று டெல்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வரும் 24-ம் தேதி வரை டெல்லி திகார் சிறையில் கார்த்தி சிதம்பரத்தை அடைக்க உத்தரவிட்டது. 

முன்னதாக கார்த்தி சிதம்பரத்திம் ஜாமின் மனுவின் மீதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் 16-ம் தேதி நடைபெற்ற விசாரணையில் INX மீடியா பணமோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்தினை அமலாக்க துறை கைது செய்வதற்கான தடையை மார்ச் 22-ஆம் தேதி வரை நீட்டித்திருந்தது. 

இந்நிலையில், இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறையின் வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கவும். பிணைத்தொகையாக ரூ.15 லட்சம் செலுத்தவும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Trending News