டெல்லி சிக்னேச்சர் பாலத்தில் ஒருவர் பலி; 3 பேர் காயம்...

'சிக்னேச்சர்' பாலத்தில் அதிவேகமாக சென்ற கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; மூவர் படுகாயம்!!

Last Updated : Apr 26, 2019, 08:14 AM IST
டெல்லி சிக்னேச்சர் பாலத்தில் ஒருவர் பலி; 3 பேர் காயம்... title=

'சிக்னேச்சர்' பாலத்தில் அதிவேகமாக சென்ற கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; மூவர் படுகாயம்!!

டெல்லி சிக்னேச்சர் பாலம் (Signature Bridge...) இந்தியாவின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக உள்ளது. இதன் பிரம்மாண்டம், காண்போரைக் கவர்ந்திழுத்து வருகிறது. ஒரு முறையாவது, பாலத்தில் பயணம் போகலாம் என்று நினைப்பவர்கள் செய்யும் சாகசம் தான் இப்போது ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இப்படியெல்லாம் செல்ஃபி மோகம் ஆட்டுவிக்கிறதே என்று, அச்சப்பட வைத்துள்ளது.

இந்த பாலம், சுமார் 14 ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த பாலத்துக்கு, 2007 ஆம் ஆண்டு தான் டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. வட கிழக்கு டெல்லியையும், காஜியாபாத் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளையும் இணைக்கும் வகையில், யமுனை ஆற்றின் குறுக்கே வாஜிராபாத்தில், இந்த பாலம், பிரம்மாண்டமாக கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது.  

மேலும், 2011 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் துறை அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, 2013 ஆம் ஆண்டில் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், 2017 ஜூலை முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு, நீண்டு கொண்டே சென்ற நிலையில், தற்போது தான் பாலம் திறக்கப்பட்டது. இந்த பாலம் அமைக்க டெல்லி அரசு சார்பில் ஆயிரத்து 344 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. 154 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கோபுரம் காண்பவர்களை கவரும் ஈர்க்கும் வகையில் உள்ளது. கிழக்குப் பகுதியில் 1 புள்ளி 8 கிலோமீட்டர் தூரமும், மேற்குபகுதியில் 1 புள்ளி 5 கிலோமீட்டர் தூரத்தையும் உள்ளடக்கிய இந்த பாலத்தில் சைக்கிள் ஓட்டிகளுக்கு தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த பாலத்தின் மேல் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக 50 பேர் செல்லும் வகையிலான 4 லிஃப்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சிக்னேச்சர் பாலத்தில் செல்ஃபி மோகத்தால் நிறைய உயிர்சேதமும் ஏற்பட்டு வருகிடது. இதையடுத்து, வியாழக்கிழமை அதிகாலையில் சிக்னேச்சர் பிரிட்ஜ் பகுதியில் ஒரு கார் மோதியதில் 23 வயது இளைஞர் கொல்லப்பட்டதோடு மூன்று பேர் காயமடைந்தனர்.

நான்கு நண்பர்கள் - ஆஷிஷ், ரிஷாப், யஷ் மற்றும் விஷால் - சிக்னேச்சர் பாலம் தங்கள் வண்டியில் ஒரு சவாரி சென்றனர். வாகனத்தை ஓட்டி வந்த ஆஷிஷ், வாகனம் மீது கட்டுப்பாட்டை இழந்து, கார் மீது ஒரு பிரிவினர் மீது மோதியது போலீசார் தெரிவித்தனர். ஆஷிஷ் காயமடைந்தார் டிராமா மையம் சிவில் லைசென்ஸ், அவர் அறிவித்தார் எங்கே டாக்டர்கள் மூலம் இறந்த கொண்டு வந்தார் போது விஷால் நிலை குறிப்பிடத்தக்க கூறினார்.

 

Trending News