இதுவரை 104 குழந்தைகள் பலி; 34 நாட்களுக்குப் பிறகு மருத்துவமனைக்கு வந்த சுகாதார அமைச்சர்..

கடந்த 34 நாட்களில் இதுவரை 104 குழந்தைகள் இறந்து விட்டது. ஆனால் இந்த 33 நாட்களாக ராஜஸ்தான் மாநில சுகாதார அமைச்சர் ரகு சர்மா, குழந்தைகளை பார்க்கவும், அவர்களின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறவும் மருத்துவமனைக்கு வரவில்லை.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 3, 2020, 05:09 PM IST
இதுவரை 104 குழந்தைகள் பலி; 34 நாட்களுக்குப் பிறகு மருத்துவமனைக்கு வந்த சுகாதார அமைச்சர்.. title=

கோட்டா: ஜே.கே.லோன் மருத்துவமனையில் (JK Lon hospital) 104 குழந்தைகள் இறந்த பிறகும், அரசு நிர்வாகம் எந்தப் பாடமும் கற்கவில்லை என்றே அதன் செயல்பாடுகள் காட்டுகிறது. சுகாதார அமைச்சர் ரகு ஷர்மாவை (Raghu sharma) வரவேற்பதற்காக ஜே.கே. லோன் மருத்துவமனையில் பச்சை கம்பளம் போடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 104 குழந்தைகள் இறந்த பிறகும், அரசு அதிகாரிக்கு கம்பளம் வரவேற்பு அளிப்பதா? என மக்கள் மிகவும் கோபமடைந்துள்ளனர். அரசு நிர்வாகம் அலட்சியத்தின் அனைத்து வரம்புகளையும் தாண்டியுள்ளது என குற்றசாட்டி உள்ளனர்.

கடந்த 34 நாட்களில் இதுவரை இந்த மருத்துவமனையில் 104 குழந்தைகள் இறந்துவிட்டதாகச் செய்திகள் சொல்கின்றன. ஆனால் இந்த 33 நாட்களாக ராஜஸ்தான் மாநில சுகாதார அமைச்சர் ரகு சர்மா, குழந்தைகளை பார்க்கவும், அவர்களின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறவும் மருத்துவமனைக்கு வரவில்லை என்பது வேதனையான நிகழ்வாக இருக்கிறது.

JK Lon Hospital

சுகாதார அமைச்சர் மருத்துவமனைக்கு (JK Lon hospital) வருகை தர உள்ளார் என்ற தகவலை அறிந்த ஆஸ்பத்திரி நிர்வாகம், மருத்துவமனையில் பணிகளை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டினர். மேலும் அமைச்சரை வரவேற்க ஒரு பச்சை கம்பளம் போடப்பட்டது. ஆனால் இது ஊடகங்களால் கவனிக்கப்பட்டபோது, அந்த கம்பளம் அகற்றப்பட்டது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது

Trending News