இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் 1,149 பேருக்கு கொரோனா; மொத்த எண்ணிக்கை 22,333

சென்னையில் மேலும் 804 பேருக்கு கொரோனா பாதிப்பு... மொத்தம் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 4802 ஆக உயர்ந்துள்ளது.... 

Last Updated : May 31, 2020, 09:02 PM IST
இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் 1,149 பேருக்கு கொரோனா; மொத்த எண்ணிக்கை 22,333 title=

சென்னையில் மேலும் 804 பேருக்கு கொரோனா பாதிப்பு... மொத்தம் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 4802 ஆக உயர்ந்துள்ளது.... 

தமிழகத்தில் இன்று மேலும் 1,149 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் இன்று மேலும் 1,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 95 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 22,333 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 72 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 12,807 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று சென்னையில் 10 பேரும், மதுரை, காஞ்சிபுரம் மற்றும் நாமக்கலில் தலா ஒருவர் என மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 173 ஆக அதிகரித்துள்ளது.

District
Confirmed
 
Active
Recovered
Deceased
Chennai

804
14,799
6,776
570
7,891

10
132
Chengalpattu

85
1,172
553
27
610
9
Thiruvallur

47
947
334
39
603
10
Cuddalore

8
462
41 420 1
Tiruvannamalai

55
416
270
36
144
2
Kancheepuram

16
398
164
7
232

1
2
Viluppuram

1
367
47
3
318
2
Ariyalur
365 10 355 0
Tirunelveli
357 145
28
211
1
Madurai

10
278
111
6
164

1
3
Kallakurichi

2
251
140
1
111
0
Thoothukkudi

10
226
89
8
135
2
Salem

49
195
142
8
53
0
Railway Quarantine

26
181
173 8 0
Coimbatore
145 0 144 1
Perambalur

1
141
2 139 0
Dindigul

1
139
16
2
122
1
Virudhunagar

2
123
65 58 0
Tiruppur
114 0 114 0
Theni
109 21 86 2
Airport Quarantine

3
99
76
9
23
0
Ranipet

1
98
14 84 0
Thanjavur

1
89
12
1
77
0
Tiruchirappalli
87 17 70 0
Tenkasi
86 23
2
63
0
Ramanathapuram

6
84
45
1
38
1
Karur
81 5 76 0
Namakkal

1
78
0 77
1
1
Erode
72 1
1
70
1
Kanyakumari

3
71
38
4
32
1
Nagapattinam

1
60
9 51 0
Thiruvarur

1
47
14 33 0
Vellore

1
43
8
1
34
1
Sivaganga

1
33
5 28 0
Tirupathur
33 5 28 0
Krishnagiri

1
28
8 20 0
Pudukkottai

4
26
10
3
16
0
Nilgiris
14 0 14 0
Dharmapuri
8 3 5 0
Unknown
8 8 0 0
Other State
3 0 0 3

இந்நிலையில், சென்னையில் மட்டும் இன்று மொத்தமாக 804 கேஸ்கள் வந்துள்ளது. சென்னையில் இதுவரை வந்ததில் இதுதான் அதிகமான எண்ணிக்கை ஆகும். சென்னையில் கொரோனா தீவிரம் அடைந்துள்ளது இதன் மூலம் உறுதியாகி உள்ளது .சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14802 ஆக உயர்ந்துள்ளது .

இன்று ஒரே நாளில் 757 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 12,757 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 9,400 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் மொத்தமுள்ள பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,286 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 18,995 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 2,052 பேரும் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இன்று 12089 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 491962 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களில் எண்ணிக்கை 9400 ஆக உள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் 13 பேர் பலியாகி உள்ளனர். இதில் சிலர் 40 வயதுக்கும் குறைவான நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது.

Trending News