தொடர்ந்து 6 மணி நேரம் பப்ஜி கேம் விளையாடிய மாணவன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததுள்ளான்.
மொபைல் 'கேம்'களிலேயே உயர் தொழில்நுட்பம், கிராபிக்ஸ் காட்சிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட கேம் பப்ஜி. இளைஞர்கள் மத்தியில் பப்ஜி விளையாட்டு மோகம் அதிகரித்துள்ளது. இந்த கேம் பல உயிர்களை காவு வாங்கி உள்ளது.
அவ்வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில், தொடர்ந்து 6 மணி நேரம் பப்ஜி கேம் விளையாடிய 12ம் வகுப்பு மாணவன், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததுள்ளான். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பப்ஜி விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட பர்கான் குரேஷி, கடந்த 28-ம் தேதி தனியாகச் சென்று செல்போனில் பப்ஜி கேம் விளையாடி உள்ளார். தொடர்ந்து 6 மணி நேரம் தீவிரமாக கேம் விளையாடிய பர்கான் குரேஷி, ஒரு கட்டத்தில் ஆக்ரோஷமாக கத்தியுள்ளர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவருக்கு நாடி துடிப்பு இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.
பப்ஜி விளையாட்டில் அவருக்கு இருந்த உற்சாகத்தின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்க வாய்ப்புகள் உள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.