பஞ்சாப் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் படாலாவில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்ப்பட்ட வெடி விபத்தில் 18 பேர் இறந்துவிட்டதாகவும், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. 

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Sep 4, 2019, 06:36 PM IST
பஞ்சாப் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு
Pic Courtesy : ANI

குர்தாஸ்பூர்: பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் படாலாவில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நேற்று மாலை வெடி விபத்து நடந்துள்ளது. இந்த பயங்கர விபத்தில் 18 பேர் இறந்துவிட்டதாகவும், மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனக் கூறப்படுகிறது. இன்னும் பலர் இடுபாடுகளில் சிக்கியுள்ளதாகதகவல்கள் வருகின்றன. இந்த வெடி விபத்து மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது. இதனால் சுற்றியிருந்த அனைத்து கட்டிடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்துக்கான காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை.

வெடி விபத்த்தில் சிக்கி காயமடைந்த 10 பேரை இதுவரை வெளியேற்றப்பட்டதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும் அஞ்சப்படுகிறது. விபத்துக் காரணமாக அக்கம் - பக்கம் இருந்த 10 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

வெடி விபத்து மூலம் பட்டாசு தொழிற்சாலை முற்றிலுமாக இடிந்து விழுந்ததாக கூறுகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் வசித்து வந்த மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்பு குழுக்கள் சம்பவ இடத்தில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இடுபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொழிற்சாலை உரிமையாளரின் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் இடிபாடுகளின் சிக்கியுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

இந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், படாலா பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு காரணமாக உயிரிழந்த அனைவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.