ஜம்மு காஷ்மீர் கிஸ்த்வர் மாவட்டத்தில் மேக வெடிப்பு: 4 பேர் பலி, 36 பேரைக் காணவில்லை

ஜம்மு காஷ்மிற் கிஸ்த்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பில் நான்கு பேர் கொல்லப்பட்டனர், சுமார் 36 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Written by - ZEE Bureau | Last Updated : Jul 28, 2021, 10:28 AM IST
ஜம்மு காஷ்மீர் கிஸ்த்வர் மாவட்டத்தில் மேக வெடிப்பு: 4 பேர் பலி, 36 பேரைக் காணவில்லை

ஜம்மு காஷ்மிற் கிஸ்த்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பில் நான்கு பேர் கொல்லப்பட்டனர், சுமார் 36 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஹோஞார் டச்சனில் ஆறு வீடுகளும் ஒரு ரேஷன் கிடங்கும் அடித்துச் செல்லப்பட்டன.

இந்த செய்தி கிடைத்தவுடன், காவல்துறை, ராணுவம், என்.டி.ஆர்.எஃப், சிவில் நிர்வாகம் மற்றும் உள்ளூர்வாசிகள் மீட்பு நடவடிக்கையைத் தொடங்கினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கிஸ்த்வர் எஸ்.எஸ்.பி தெரிவித்தார். சம்பவ இடத்திலிருந்து வரும் அறிக்கைகள், 36 பேரை காணவில்லை என தெரிவித்துள்ளன.

காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருவதாக அவர் கூறினார். காணாமல் போனவர்கள் இறந்துவிட்டிருக்கலாம் என்ற அச்சமும் உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக ஜூலை 12, 2021 அன்று இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் ஏற்பட்ட மேக வெடிப்பால் கனமழை பெய்து பெரு வெள்ளம் ஏற்பட்டது. சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல கார்கள் அடித்துச் செல்லப்பட்டன. மெக்லியோட்கஞ்ச் அருகே பாக்சு கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக பல உணவகங்களும் தங்கும் விடுதிகளும் சேதமடைந்தன. விடாது பெய்த மழையால் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

தர்மசாலாவின் மேக வெடிப்பு, கனமழை மற்றும் பெள்ளப்பெருக்குக்குப் பிறகு பல்வேறு சமூக ஊடக தளங்களில் நெட்டிசன்கள் பல வீடியோக்களை பகிர்ந்தனர். இவை பார்ப்பதற்கு பயங்கரமாகவும் அச்சம் அளிக்கும் வகையிலும் இருந்தன. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News