பலத்த மழை காரணமாக கர்நாடகா உள்ளிட்ட மாவட்டங்களில் பலியானோர் எண்ணிக்கை 180-ஆக அதிகரித்துள்ளது!
கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால், கடும் வெள்ளம் பெருக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் 184-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கர்நாடகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெலகாவி மாவட்டத்தில் வான்வழி ஆய்வினை நேற்று மேற்கொண்டார்.
கேரளாவின் வயநாட்டில் தொடர்ந்து பெய்த மழையால் நிலைமையை கட்டுப்பாடற்றதாக ஆக்கியுள்ளது, வயநாட்டில் தொடர்ந்து பெய்த மழையால் மேப்பாடி பஞ்சாயத்தின் புத்தமாலா கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பேரழிவு மீட்பு படை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் தற்போது தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகாவின் வெள்ள நிலைமையை மதிப்பாய்வு செய்த முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தெரிவிக்கையில், வெள்ளத்தால் 24-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், 1024 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன, மாநிலத்தில் நிவாரண மற்றும் மீட்பு பணிகளுக்காக 20 என்.டி.ஆர்.எஃப் குழுக்கள், 10 இராணுவக் குழு, 5 கடற்படை அணிகள் மற்றும் 2 எஸ்.டி.ஆர்.எஃப் அணிகள் ஈடுபட்டுள்ளன, இதனுடன், இறந்தவரின் குடும்பத்திற்கு 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
Karnataka: Several houses in Rajiv Gandhi Extension of Shivamogga district are damaged in the flood which hit the state. Locals say, "No leader has come to see us, neither the CM nor anyone from opposition. Though we're getting food, there is no water. Houses are damaged." (11.8) pic.twitter.com/Je1ATRQz8M
— ANI (@ANI) August 12, 2019
கோவாவில் உள்ள கடற்படை விமான நிலையம், INS Hansa நேற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெலகாவி மாவட்டத்தில் வான்வழி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தொடர்ந்தது. INS Hansa-வைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மூன்று சுற்ற மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். அதில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 26 பேரை மீட்டு நிவாரண முகாம்களுக்கு மாற்றினர்.
Karnataka: Naval Air Station, INS Hansa at Goa continued aerial rescue and relief operations in flood-hit Belagavi district yesterday. Naval helicopters from INS Hansa carried out three sorties in which 26 stranded people were moved to relief camps yesterday. pic.twitter.com/QrxNCBeCXY
— ANI (@ANI) August 12, 2019
சிவமோகா மாவட்டத்தின் ராஜீவ் காந்தி விரிவாக்கத்தில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. உள்ளூர்வாசிகள் கூறுகையில், "எங்களைப் பார்க்க எந்தத் தலைவரும் வரவில்லை, முதல்வரோ அல்லது எதிர்க்கட்சியைச் சேர்ந்த எவரோ இல்லை. எங்களுக்கு உணவு கிடைத்தாலும் தண்ணீர் இல்லை. வீடுகள் சேதமடைந்துள்ளன. எங்களை காக்க அரசாங்கள் ஏதேனும் செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளனர்.