மகாராஷ்டிராவின் பிவாண்டியில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர், பலர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது!!
மகாராஷ்டிராவின் பிவாண்டியில் நடந்த ஒரு சோகமான சம்பவத்தில் திங்கள்கிழமை (செப்டம்பர் 21) மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 8 பேரின் உயிரைப் பறித்ததுடன், பலர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது என்று தானே மாநகராட்சி PRO தெரிவித்துள்ளது.
நமக்கு கிடைத்த தகவலின் படி, கட்டிடம் பாழடைந்த நிலையில் இருந்தது. அதிகாலை 3.45 மணியளவில் மக்கள் தூங்கிக்கொண்டிருந்த போது கட்டிடம் திடீர் என இடிந்து விழுந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக NDRF குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது.
ALSO READ | இன்று முதல் இந்த மாநிலங்களில் பள்ளி 'மணி' ஒலிக்கும்... பெற்றோர் கவனத்திற்கு!!
பிவாண்டியில் கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில் கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த குழந்தையை NDRF குழு மீட்டது. ஆரம்ப கட்ட தகவல்களின்படி, உள்ளூர்வாசிகள் 20 பேரை மீட்டுள்ளனர் மற்றும் சுமார் 25 பேர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. இதுவரை இந்த விபத்தால் 8 பேர் இறந்துள்ளதாகவும் மேலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் கூறப்படிக்கிறது. இந்த விபத்து குறித்த தெளிவான தகவல் கிடைக்கவில்லை. மேலும் தகவலுக்கு காத்திருக்கவும்.
#WATCH Maharashtra: Rescue operation by NDRF (National Disaster Response Force) underway at the site of building collapse in Bhiwandi, Thane.
Eight people have lost their lives in the incident which took place earlier today. pic.twitter.com/dFvXwhHPH3
— ANI (@ANI) September 21, 2020