ஒடிசாவில் கண்டறியப்பட்ட அரிய வகை மஞ்சள் ஆமை … வைரலாகிய அதன் காட்சிகள்..!!!

அரிய வகை ஆமையை உள்ளூர்வாசிகள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 20, 2020, 12:08 PM IST
  • மஞ்சள் நிற ஆமையை இதற்கு முன் பார்த்ததில்லை என உள்ளூர் வாசிகள் தெரிவித்தனர்
  • Trionychidae ஆமைகள் மென்மையான ஆமைகள், அவை ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் வட அமெரிக்காவில் காணப்படுகின்றன.
  • இவை 50 ஆண்டுகள் ஆயுட்காலத்தை கொண்டது என வன அதிகாரிகள் கூறுகின்றனர்
ஒடிசாவில் கண்டறியப்பட்ட அரிய வகை மஞ்சள் ஆமை … வைரலாகிய அதன் காட்சிகள்..!!! title=

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை மிக அரிதான மஞ்சள் ஆமையை கண்டறிந்தனர். ஆமையை கண்ட உடனேயே, உள்ளூர்வாசிகள், வனத்துறை அதிகாரிகளை அழைத்து ஆமையை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

“மீட்கப்பட்ட ஆமையின் ஓடு மற்றும் உடல் அனைத்தும் மஞ்சளாக இருந்தது. இது ஒரு அரிய ஆமை, இது போன்ற ஒன்றை நான்  முன்பு பார்த்ததில்லை ”என்று இந்த ஆமையை கண்டறிந்த நபர் கூறினார்.

இது ஒரு அல்பினோ (Albino) ஆமையாக இருக்கலாம் என்று கூறிய வனத்துறையின் முன்னாள் அதிகாரி, (IFS) சில ஆண்டுகளுக்கு முன்பு சிந்தில்  இதுபோன்ற ஒரு  ஆமை கண்டுபிடிக்கப்பட்டதாக, சுசாந்தா நந்தா ட்வீட் செய்துள்ளார். அல்பினோ என்பது சருமம் வெளிறி  இருக்கும் நிலை. அதாவது சருமத்தில் மெலனின் இல்லாத நிலை ஆகும்.

கடந்த மாதமும், ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் கீழ் உள்ள டியுலி அணையில் ஒரு அரிய வகை ட்ரையானிகடே (Trionychidae) ஆமை மீனவர்களால் பிடிக்கப்பட்டு பின்னர் வனத்துறையால் டியுலி அணையில் விடப்பட்டது.

ட்ரையானிகடே ஆமைகள் மென்மையான ஆமைகள், அவை ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் வட அமெரிக்காவில் காணப்படுகின்றன. ஆமை 30 கிலோகிராமுக்கு மேல் எடை கொண்டது எனவும், அதன் அதிகபட்ச ஆயுள் 50 ஆண்டுகள் எனவும் வனத்துறையினர் கூறினர்.

ALSO READ | AIIMS தில்லியில் COVID-19 தடுப்பு மருந்து COVAXIN மனித பரிசோதனை தொடங்குகிறது..!!!

Trending News