ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள் 20 பேர் பதவி நீக்கத்தை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, டெல்லி ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20பேர் களையும் தகுதி நீக்கம் செய்யலாம் என குடியரசு தலைவருக்கு தேர்தல் ஆனையம் பரிந்துரைத்தது.
இதையடுத்து, இந்த 20 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்வதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.எனவே,ஆம் ஆத்மி எம்எல்ஏ -க்கள் 20 பேர் பதவி நீக்கத்தை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைத் திரும்பப் பெற்றனர்.
இந்நிலையில்,புதிய மனுக்கள் அக்கட்சியின் தரப்பில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டவிதிகளை முறையாக பின்பற்றவில்லை, விசாரணை முன்னெடுக்கப்படவில்லை எனவே தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்திற்கு எதிரான மனுக்களை விசாரணை செய்த ஐகோர்ட்டு தடைவிதிக்க மறுத்துவிட்டது.
20 AAP MLAs case: Delhi High Court also seeks reply of all respondents including the Election Commission of India (ECI) on the plea of disqualified MLAs
— ANI (@ANI) January 24, 2018