லடாக்கில் இந்திய இராணுவம் மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையிலான மோதல்களுக்கு மத்தியில், விழிப்புணர்வை வலுப்படுத்த இந்திய - திபெத் எல்லை காவல்துறையின் (ITBP) சுமார் 2,000 கூடுதல் துருப்புக்கள் சீன-இந்திய எல்லையில் உள்ள முன்னோக்கி இடங்களுக்கு அனுப்பப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய - திபெத் எல்லை காவல்துறையின் ITBP பணியாளர்கள், தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது லடாகில் ஏற்பட்டு வரும் பதற்றம் காரணமாக துருப்புகள் சீன-இந்திய எல்லைக்கு அனுப்ப படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கால்வான் பள்ளத்தாக்கு மோதலில் 40க்கும் மேற்பட்ட சீன துருப்புக்கள் கொல்லப்பட்டனர்: Sources...
சீன-இந்திய எல்லையின் வெவ்வேறு இடங்களில் சுமார் 20 கூடுதல் படை குழுக்கள் (2,000 துருப்புக்கள்) நிறுத்தப்படலாம் என்று அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
இந்திய இராணுவத்துடனும், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் 3,488 கி.மீ நீளமுள்ள உண்மையான கட்டுப்பாட்டுக்(LAC) கோட்டை ITBP பாதுகாக்கிறது.
காரகோரம் பாஸ் முதல் ஜச்செப் லா வரை - யூனியன் பிரதேசமான லடாக், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள 180 எல்லைக் காவல் பதவிகளில் ITBP பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மலிவான அரசியலில் ஈடுபட வேண்டாம் என ராகுல் காந்திக்கு அமித் ஷா அட்வைஸ்..!
முன்னதாக, கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15-ம் தேதி சீன துருப்புக்களுடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர், இது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து எல்லை பகுதியல் இராணுவ துருப்புகளை கூட்ட இரு தரப்பினையும் தூண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.