சிவசேனா குறித்து சோனியா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: சரத் பவார்

மகாராஷ்டிராவின் அரசியல் நிலைமை குறித்து சோனியா காந்தியிடம் விவாதித்ததாகவும், சிவசேனா குறித்து குறித்து எந்த ஆலோசனையும் செய்யப்பட வில்லை என்று சரத் பவார் தெளிவுபடுத்தி உள்ளார்.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Nov 18, 2019, 07:22 PM IST
சிவசேனா குறித்து சோனியா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: சரத் பவார்
கோப்புப்படம்

புதுடெல்லி: மகாராஷ்டிராவின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு பேசிய என்சிபி தலைவர் சரத் பவார், மகாராஷ்டிராவின் அரசியல் நிலைமை குறித்து சோனியா காந்தி விவாதித்ததாக தெரிவித்தார். மகாராஷ்டிராவில் அரசாங்கம் அமைப்பது குறித்து சோனியா காந்தியுடன் எந்த ஆலோசனையும் செய்யப்பட வில்லை என்று பவார் தெளிவுபடுத்தினார். காங்கிரஸ் மற்றும் என்.சி.பி தூதுக்குழுவில் இடம் பெற்றுள்ள தலைவர்கள் மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பது குறித்து பேசுவார்கள் எனக் கூறினார்.

இந்த சந்திப்பின் போது ஏ.கே. ஆண்டனியும் உடன் இருந்தார். மகாராஷ்டிராவின் அரசியல் நிலைமை குறித்து நாங்கள் விரிவாக விவாதித்தோம். மாநிலத்தின் நிலைமை குறித்து சோனியா காந்தி விளக்கமளித்தேன்" என்று ஷரத் பவார் கூறினார்.

என்.சி.பி தலைவர் யாருடன் இருக்கிறார் எனக் அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்கு அவர் நேரடியாக பதில் அளிக்காமல், நான் அனைவருடன் இருக்கிறேன் என பதில் அளித்தார். பவாரின் இந்த அறிக்கையில் பல அர்த்தங்கள் உள்ளது. 

ஷரத் பவார், மேலும் கூறுகையில், "யாருடன் செல்வது என்று பேசுவதில் பயனில்லை. எங்கள் கூட்டணி கட்சிகளுடன் பேச வேண்டியிருக்கும். சிவசேனாவில் எத்தனை எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பது எனக்குத் தெரியாது. அவர்களிடம் கேளுங்கள். நாங்கள் அனைவருடன் இருக்கிறோம். எங்கள் கட்சியின் கொள்கையை நாங்கள் மட்டுமே தீர்மானிப்போம். யாருடன் செல்ல வேண்டும் என்பதை நாங்கள் மட்டும் தான் தீர்மானிப்போம்.

மாநிலங்களவையில் என்.சி.பியைப் பாராட்டிய பிரதமர் மோடி குறித்து கேள்விக்கு, பாராளுமன்ற சபையின் கவுரத்தை கவனித்துக்கொள்வது முக்கியம். இது எங்கள் கொள்கை. நாங்கள் பாஜகவுக்கு எதிராக மட்டுமே தேர்தலில் போராடினோம்.

சரத் பவார் மேலும் கூறுகையில், "பொதுவான குறைந்தபட்ச திட்டம் மற்றும் பிற சிறு கட்சிகள் கேட்கப்பட்டன. சிவசேனா தனது சொந்த முடிவுகளை எடுத்து வருகிறது. எங்களிடம் 54 எம்.எல்.ஏ கட்சி மட்டுமே உள்ளது, இப்போது, நாங்களும் காங்கிரசும் ஒன்றாக இருக்கிறோம், வேறு யாரும் இல்லை எனத் தெளிவாக கூறினார்.

மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை அமைக்க சோனியா காந்தியுடன் எதுவும் பேசவில்லை என்று அவர் கூறினார். என்.சி.பி மற்றும் காங்கிரஸ் குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டன. சிறிய கூட்டணி கட்சிகளுடனும் கலந்துரையாடுவோம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. விரிவான கலந்துரையாடலுக்குப் பிறகு, நாங்கள் ஒரு முடிவுக்கு வருவோம் எனக் கூறினார்.

முன்னதாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க எந்தவொரு கட்சியும் இதுவரை தேவையான பெரும்பான்மையை ஆளுநரிடம் முன்வைக்க முடியவில்லை. இதனால் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமுல் படுத்தப்பட்டுள்ளது. பாஜகவுடன் உறவை முறித்துக்கொண்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறது. ஆனாலும் இதுவரை, அந்த முயற்சி முழுமை அடையவில்லை. 

தேர்தலுக்கு முந்தைய நட்பு கட்சிகளா பாஜக-வும், சிவசேனாவும் அக்டோபர் 21 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டன. 288 இடங்களில் பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் வென்றது. இருப்பினும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சுழற்சி முதலமைச்சர் பதவியைக் கோரியதைத் தொடர்ந்து கூட்டணி பிரிந்தது.  மறுபுறம், மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் முறையே 44 மற்றும் 54 இடங்களை வென்றன. ஆனால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாதபட்சத்தில் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமுல் படுத்தப்பட்டுள்ளது.