சாமோலி வெள்ளத்திற்குப் பிறகு உத்தராகண்ட் முரேண்டாவில் உருவான இயற்கை ஏரி

அண்மையில் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்குக்குப் பின்னர் உத்தரகண்ட் மாநிலத்தின் முரேண்டா பகுதியில் இயற்கையாக ஏரி ஒன்று உருவாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 20, 2021, 03:04 PM IST
  • இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை குழு தனது அடிப்படை முகாமை ஏரிக்கு அருகில் நிறுவியுள்ளது.
  • விமானக் குழுவிற்கு வழிகாட்ட உதவும் சரியான குறிப்புகள் மற்றும் பிற வசதிகளுடன் ஹெலிபேட் அமைக்கப்பட்டு வருகிறது.
  • ஏரி நீரை சீராக வெளியேற்றுவதற்கான வழிகளை இந்திய திபெத் எல்லை காவல் படை ITBP குழு ஏற்படுத்தி வருகிறது.
சாமோலி வெள்ளத்திற்குப் பிறகு உத்தராகண்ட் முரேண்டாவில் உருவான இயற்கை ஏரி  title=

அண்மையில், உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் ஜோஷிமாத்தில் பனிப்பாறை உடைந்தபின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் பின்னர் உத்தரகண்ட் மாநிலத்தின் முரேண்டா பகுதியில் இயற்கை ஏரி ஒன்று ருவாகியுள்ளது. இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை (ITBP) குழு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) அதிகாரிகளுடன் புதன்கிழமை இயற்கை ஏரி உருவாகியுள்ள முரேண்டாவை அடைந்தது.

இந்த குழு தனது அடிப்படை முகாமை ஏரிக்கு அருகில் நிறுவியுள்ளதுடன், ஹெலிபேட் அமைப்பதற்கான இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது என்று ITBP அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விமானக் குழுவிற்கு வழிகாட்ட உதவும் சரியான குறிப்புகள் மற்றும் பிற வசதிகளுடன் ஹெலிபேட் அமைக்கப்பட்டு வருகிறது. "DRDO குழுவுடன் ஒரு ITBP குழுவும் ஏரி உருவான பகுதிக்கு வந்துள்ளது" என்று அந்த அதிகாரி கூறினார்.

அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவு (Natural Disaster) காரணமாக உருவான ஏரி, எந்த அளவிற்கு பாதுகாப்பானது, அது உடையும் ஆபத்தும் உள்ளதா என்பது போன்ற பல வகைகளில், குழு கண்காணிக்கும் என்று ITBP அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஏரி நீரை சீராக வெளியேற்றுவதற்கான வழிகளை இந்திய திபெத் எல்லை காவல் படை ITBP குழு ஏற்படுத்தி வருகிற்து என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

பிப்ரவரி 7 ஆம் தேதி பனி பனிச்சரிவால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் தவுலி கங்கை நதியில் தபோவனில் 520 மெகாவாட்  திறன் கொண்ட NTPC நீர் மின் திட்டத்தை முழுமையாக அடித்து சென்றது. பனிச்சரிவு காரணமாக சுமார் 14 சதுர கி.மீ பரப்பளவில் சாமோலி மாவட்டத்தில் ரிஷிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ALSO  READ | WATCH: குறுகிய சுரங்கத்திலிருந்து ஒரு நபரை மீட்ட ITBP. வைரலாகும் வீடியோ..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News