இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய மோடி அவர்:- "மழைக்கால கூட்டத்தொடரில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். இந்தக் கூட்டத்தொடரில் முக்கிய முடிவுகள் எட்டப்படும் என நம்புகிறேன். இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி நாட்டின் 70-வது சுதந்திர தின கொண்டாடப்படவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக நடைபெறும் இக்கூட்டத்தொடர் சிறப்பானது" என்றார்.
இன்று காலை மக்களவை கூடியவுடன் புதிதாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களை பிரதமர் மோடி அவைக்கு அறிமுகம் செய்து வைத்தார். புதிதாக பதவியேற்றுக் கொண்ட உறுப்பினர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். மேலும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The mood all around is to take good decisions and move towards the path of progress: PM at the start of Parliament session
— PMO India (@PMOIndia) July 18, 2016
#WATCH: PM Modi briefs the media as he arrives at the Parliament for #MonsoonSessionhttps://t.co/q5NlVsodQv
— ANI (@ANI_news) July 18, 2016