உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காணவில்லை, போலீசில் புகார்!

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காணவில்லை என டெல்லி போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : May 14, 2021, 09:12 AM IST
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காணவில்லை, போலீசில் புகார்!

புது டெல்லி: கொரோனாவின் இரண்டாவது அலை அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. பல உச்சங்களைக் கடந்து சென்று கொண்டிருக்கும் இந்த தொற்றை கட்டிப்படுத்த முடியாமல் மக்களும் நிர்வாகமும் திகைத்து நிற்கின்றன. வைரஸ் பரலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. 

இதற்கிடையில், உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை (Amit Shah) காணவில்லை என்று டெல்லியில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் நாகேஷ் கரியப்பா இந்த புகாரை அளித்துள்ளார். ஆன்லைன் மூலம் மத்திய உள்துறை அமைச்சர் 'அமித் அனில் சந்திர ஷா’வை காணவில்லை என்று டெல்லி போலீசில் அவர் புகார் அளித்துள்ளார்.

 

 

ALSO READ | ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கீழ்ப்பாக்கத்தில் இருந்து நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றம்

மக்களை கவனித்துக்கொள்ள அரசாங்கம் தேவைப்படும்போது அதில் மிகவும் முக்கியப் பொறுப்பில் உள்ள நபர் தனது பொறுப்பு மற்றும் வேலையில் இருந்து காணவில்லை என நாகேஷ் கரியப்பா கூறியுள்ளார். மேலும், அரசியல்வாதிகள் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும். மக்கள் இதுபோரா ஒரு இக்கட்டான நெருக்கடியை எதிர்கொள்ளும் போது அதற்கு அரசியல்வாதிகள் பதில் சொல்லும் பொறுப்பு இந்திய அரசு அல்லது பாஜகவுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களை நோக்கியும் உள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த புகார் தொடர்பாக இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தேசிய செயலாளர் லோகேஷ் ஷுஹா கூறியதாவது, 2014-ம் ஆண்டு பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் அனைத்தும் மாறிவிட்டது. தற்போது பெருந்தொற்று காலத்தில் மத்திய அரசின் இரண்டாவது இடத்தில் உள்ள உள்துறை மந்திரி அமித்ஷா காணவில்லை’ என தெரிவித்தார். 

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News