பாஜக-வின் தலைவராக அமித்ஷா தொடருவார் எனவும், தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது!
புதுடெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற கட்சியின் ஆட்சி மன்ற குழுக் கூட்டத்தில், பாஜக-வின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
"மத்திய உள்துறை அமைச்சராக தான் பொறுப்பேற்ற பின்னர், கட்சியின் தலைமை பொறுப்பை வேறு யாருக்காவது அளிக்க வேண்டும் என அமித் ஷா கூறி வந்தார். இந்நிலையில் தற்போது பாஜகவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் " என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
The @BJP4India has won several elections under the leadership of party president Shri @AmitShah. After the Prime Minister Shri @narendramodi appointed him the Home Minister, Amitji himself had said that the responsibility of party president should be given to someone else. 1/2
— Rajnath Singh (@rajnathsingh) June 17, 2019
BJP Parliamentary board met today and it has selected Shri @JPNadda as the working president. He will remain the working president till the BJP’s membership drive& org. elections are over.
Congratulations & best wishes to Naddaji for shouldering this new responsibility. 2/2
— Rajnath Singh (@rajnathsingh) June 17, 2019
பாஜக எம்.பி.யான ஜே.பி.நட்டா, முந்தைய பாஜக அரசில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முடிவு ஆனது கட்சி செயல் தலைவர்களுடனான பேச்சுவார்த்தை பின்னர் எடுக்கப்பட்டதாகவும், கட்சி தலைவரகா அமித் ஷா தொடர்ந்து செயல்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.