புதுடெல்லி: "Gupkar gang" மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளார். இந்த கும்பல் உலகளவில் மூவர்ணக் கொடியை அவமதிப்பதாக அமித் ஷா சாடுகிறார்.
"குப்கர் கும்பல்" ("Gupkar gang") என்பது "குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி", ஜம்மு-காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவர்களின் குழுவை குறிக்கிறது. ஃபாரூக் அப்துல்லா, அவரது பரம எதிரியான மெஹ்பூபா முப்தி மற்றும் சஜ்ஜத் லோன் (Sajjad Lone) உட்பட பலரை குறிப்பிடும் சொல். ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கில் சட்டப்பிரிவு 370 ஐ மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று போராடுபவர்களை குறிப்பிடும் சொல் Gupkar gang.
Gupkar gang-கை கடுமையாக சாடிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சோனியா காந்தியும் அவர்களை ஆதரிக்கிறாரா என்று கேட்டு, சோனியா காந்தியையும் குறிவைத்தார். அதுமட்டுமல்ல, 'தேச விரோத அரசியல்' எண்ணம் கொண்டவர்களுடன் காங்கிரஸ் இணைகிறது என்பது தெளிவாகிறது என்றும் அமித் ஷா குறைகூறினார்.
Shame on Cong. & Gupkar Gang, they will not succeed. We are with the Central Govt. on this @AmitShah ji. Thank you so much for removing Article 370.
— Amar Singh Panwar (@amarDgreat) November 17, 2020
Gupkar gang, சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் (Congress) மீது தாக்குதல் நடத்திய அமித் ஷா, காஷ்மீரை பயங்கரவாத சகாப்தத்திற்கு கொண்டு வர இவர்கள் விரும்புகின்றனர் என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
அது மட்டுமல்ல, Gupkar gang நாட்டின் மனநிலையுடன் ஒத்துப் போகவில்லை என்றால், பொதுமக்கள் அதற்கு தக்க பாடம் புகட்டி, ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவார்கள் என்றும் ஷா கூறினார். காஷ்மீரில் வெளிநாட்டு சக்திகள் தலையிட வேண்டும் என்று இந்தக் குழு விரும்புவதாகவும் உதாரணங்களுடன் அமித் ஷா சுட்டிக் காட்டினார்.
மெஹ்பூபா-பாரூக்கின் அறிக்கை தேச விரோதமானது
மெஹ்பூபா-பாரூக்கின் அறிக்கை தேச விரோதமானது என்று கூறிய அமித் ஷா, அவர்கள் பாகிஸ்தானுடன் சமரசம் செய்துக் கொள்வதுடன், சீனாவிடம் இருந்து உதவி பெறுவதாக பகீர் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தார்.
'Gupkar gang-இன் குறிக்கோள் ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவை மீண்டும் அமல்படுத்த வேண்டும்' என்பதே, என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
பி.டி.பி தலைவர் மெஹபூபா முப்தி மீண்டும் ஒரு முறை பிரித்தாளும் அறிக்கைகள் மூலம் தன்னை அரசியலில் தக்க வைத்துக் கொள்ள முயல்கிறார். மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீர்-லடாக் பிராந்தியங்களில் இருந்து காஷ்மீரிகளை வெளியேற்றி பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களை அங்கு குடியேற்றுவதாக மெஹ்பூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார். இது, ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் மத்திய அரசாங்கத்திற்கு மெஹ்பூபா முஃப்தி எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR