ஞாயிற்றுக்கிழமை இரவு 8:13 மணியளவில் ராஜ்கோட் மற்றும் கட்ச் உள்ளிட்ட குஜராத்தின் பல பகுதிகளில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி கட்ச் மாவட்டத்தின் பச்சாவ் பகுதியில் இருந்து 13 கி.மீ தூரத்தில் பதிவாகியுள்ளது. நிலநடுகத்தின் தீவிரம் மிகவும் வலுவாக இருந்ததால், கட்ச், சவுராஷ்டிரா, அகமதாபாத் ஆகிய பகுதிகளிலும் நடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ராஜ்கோட், கட்ச் மற்றும் படான் மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் உடனடி தொலைபேசி உரையாடலை மேற்கொண்டு நிலைமை குறித்த தகவல்களைப் பெற்றார்.
எவ்வாறாயினும், எந்தவொரு விபத்து அல்லது சொத்து இழப்பு பற்றிய உடனடி அறிக்கைகள் தற்போது இல்லை.
குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில், ஜம்மு-காஷ்மீரில் 3.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. மையப்பகுதி கத்ராவிலிருந்து 90 கி.மீ தூரத்தில் பதிவானது குறிப்பிடத்தக்கது.