ஆந்திராவில் பயங்கரம்: சாலை விபத்தில் ஐந்து தொழிலாளர்கள் பலி. லாரி டிரைவர் தப்பி ஓட்டம்

Andhra Pradesh Accident: அதிகாலை தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ ரிக்ஷா மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில், குறைந்தது ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் மற்றும் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Shiva Murugesan | Last Updated : May 17, 2023, 11:53 AM IST
  • ஆட்டோவில் பயணம் செய்த 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலி, 7 பேர் பலத்த காயம்.
  • பயங்கர சாலை விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • விபத்திற்குப் பிறகு, லாரி டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் தெலுங்கானா மாநிலத்திற்குள் சென்றுவிட்டார்.
ஆந்திராவில் பயங்கரம்: சாலை விபத்தில் ஐந்து தொழிலாளர்கள் பலி. லாரி டிரைவர் தப்பி ஓட்டம் title=

Palnadu Road Accident: தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா வட்டத்தில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்து உள்ளனர். தாகேபள்ளி மண்டலின் கொடுகல பகுதியில் புதன்கிழமை காலை இந்த விபத்து நடந்துள்ளது. அந்த சாலை வழியாக வேகமாக வந்த லாரி, தொழிலாளர்கள் சென்ற ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை 108-ல் குர்ஜாலா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை:
தாமராசர்லா மண்டலம் நரசாபுரத்தில் இருந்து குர்ஜாலா மண்டலம் புலிபாடு நோக்கி தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த போது ஆட்டோவில் 23 தெலுங்கானா தொழிலாளர்கள் பயணம் செய்தனர். இறந்த 5 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி.! சிசிடிவி காட்சியால் பரபரப்பு..! கைது செய்த போலீஸ்!

வாகனத்தை நிறுத்தாமல் தப்பி சென்ற லாரி டிரைவர்:
இந்த சம்பவம் குறித்து பேசிய பல்நாடு மாவட்ட காவல் அதிகாரி, இந்த விபத்து சம்பவம் அதிகாலை 4 மணியளவில் நடந்ததாக மக்கள் தெரிவித்ததாகத் கூறினார்.  தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று நல்கொண்டாவில் இருந்து பல்நாடு நோக்கி வந்த ஆட்டோ ரிக்ஷா மீது மோதியது. இந்த விபத்திற்குப் பிறகு, லாரி டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் தெலுங்கானா மாநிலத்திற்குள் சென்றுவிட்டார் எனவும் தெரிவித்தார்.

விவசாய வேலைக்காக சென்றவர்கள் மீது லாரி மோதியது:
இந்த விபத்தில் பலியானவர்கள் அனைவரும் தாமசர்லாவில் இருந்து ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டத்தில் உள்ள குராசலா மண்டலத்திற்கு உட்பட்ட கிராமத்திற்கு விவசாய வேலைக்களுக்காக சென்று கொண்டிருந்தனர். இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் பிறரின் விவரங்கள் இன்னும் தெரியவில்லை. போலீஸ் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: மது அருந்தி பைக் ஓட்டி வந்த நபர் சாலையில் உருண்டு அட்டகாசம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News