India-Nepal எல்லையில் பயங்கரவாதிகளின் புகலிடங்களாக மாறும் Guest Houses: பகீர் Report

பீகாரின் எல்லை மாவட்டங்களில் இந்திய-நேபாள எல்லைக்கு அருகே ஏராளமான மசூதிகள் மற்றும் விருந்தினர் மாளிகைகள் உள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 28, 2020, 03:37 PM IST
  • இந்திய-நேபாள எல்லையில் நடக்கும் தீவிர நடவடிக்கைகள் குறித்த செய்திகள் வெளிவந்துள்ளன.
  • இந்திய-நேபாள எல்லையில் செயல்படும் ஜிஹாதி குழுக்களுக்கு பாகிஸ்தானிலிருந்து நிதி உதவி.
  • எல்லையில் தாவத்-இ-இஸ்லாமியா மற்றும் பங்களாதேஷிலிருந்து வருபவர்கள் தங்குவதற்கு இரண்டு மாடி விருந்தினர் மாளிகை கட்டப்பட்டுள்ளது.
India-Nepal எல்லையில் பயங்கரவாதிகளின் புகலிடங்களாக மாறும் Guest Houses: பகீர் Report title=

புதுடெல்லி: இந்திய பாதுகாப்பு ஏஜன்சிகள் (Indian Security Agencies) தயாரித்த அறிக்கையில் இந்திய-நேபாள எல்லையில் நடக்கும் தீவிர நடவடிக்கைகள் குறித்த செய்திகள் வெளிவந்துள்ளன. அந்த அறிக்கையின்படி, பீகாரின் எல்லை மாவட்டங்களில் இந்திய-நேபாள எல்லைக்கு அருகே ஏராளமான மசூதிகள் மற்றும் விருந்தினர் மாளிகைகள் உள்ளன. இவற்றிற்கு பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பான தாவத்-இ-இஸ்லாமியா (Dawat-e-Islamia) எனப்படும் DeL மூலம் நிதி உதவி கிடைக்கிறது.

இரண்டு மாடி விருந்தினர் மாளிகையில் சந்தேக நபர்கள் தங்கியுள்ளனர்

இந்திய-நேபாள எல்லைக் (India Nepal Border) குறித்த சமீபத்திய தகவல்களை அளித்த அதிகாரி ஒருவர், பாகிஸ்தானின் அமைப்பான தாவத்-இ-இஸ்லாமியா மற்றும் பங்களாதேஷிலிருந்து வருபவர்கள் தங்குவதற்கு இரண்டு மாடி விருந்தினர் மாளிகை கட்டப்பட்டுள்ளது என்று கூறினார். இந்த பயங்கரவாத அமைப்பிற்காக 1.25 கோடி ரூபாய்க்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு நிறுவனங்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், இந்தியா மற்றும் நேபாளத்தில் உள்ள இந்த அமைப்பின் கிளைகளால் இந்த நிதி உதவி செய்யப்படுகிறது.

ALSO READ: Viral Video: ‘வேண்டாம்…..விட்டுடு’ என வடிவேலு style-ல் அழும் சீன வீரர்கள்!!

பாகிஸ்தானிலிருந்து நிதி உதவி

இந்திய-நேபாள எல்லையில் செயல்படும் ஜிஹாதி குழுக்கள் முக்கியமாக பாகிஸ்தான் (Pakistan) குழுக்களிடமிருந்து நிதி சேகரித்து வருவதாக அறிக்கை கூறுகிறது. எல்லை மாவட்டங்களான ரௌத்ஹட், பர்சா, கபில்வஸ்து, சுன்சாரி மற்றும் பரா ஆகிய இடங்களில் வெளிநாட்டு நிதியுதவி பெற்ற மதரஸாக்கள் மற்றும் மசூதிகள் இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதும் தெரிய வந்துள்ளது.

லஷ்கர் உ.பி.யில் துடுதுடிப்புடன் செயல்படும் முனைப்பில் உள்ளது

லஷ்கர்-இ-தைபா (Lashkar-e-Taiba) என்ற பயங்கரவாதக் குழு நேபாள எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளை குறிவைத்து உத்தரபிரதேசத்தின் (Uttar Pradesh) கோரக்பூர் மற்றும் பைசாபாத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிக்கிறது. "நேபாளம், எல்லை மாவட்டங்களில் பாகிஸ்தான் ஆதரவு குழுக்களுக்கு தங்குமிடம் அளிக்கிறது. இது இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்கும்" என்று அந்த அதிகாரி கூறினார். இந்திய-நேபாள எல்லையில் இஸ்லாமிய நடவடிக்கைகள் அதிகரிப்பது பாதுகாப்புப் படையினருக்கு தீவிரமான கவலையாக உள்ளது.

உமர் மத்னி பொறுப்பை கையாளுகிறார்

இந்த பகுதியில் தங்கள் அமைப்பை விரிவுபடுத்தும் பொறுப்பு லஷ்கர் செயற்பாட்டாளர் முஹம்மது உமர் மத்னிக்கு ஒப்படைத்துள்ளதாக அறியப்படுகிறது. மேற்கு வங்காளத்தின் (West Bengal) கொல்கத்தா (Kolkata) மற்றும் பீகாரின் (Bihar) தர்பங்கா ஆகிய இடங்களுக்கும் மத்னி பல சந்தர்ப்பங்களில் அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: இந்தியா சீனா இடையில் மத்தியஸ்தம் செய்யத் தயார்: Donald Trump

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News