புது டெல்லி: தேர்தல் புகைப்பட அடையாள அட்டை நாட்டின் குடியுரிமைக்கான சான்றா? எனக் கேட்டால், கடந்த வாரத்தில் வெவ்வேறு நீதிமன்றங்களின் முரண்பாடான தீர்ப்புகள் அடிப்படையில், இந்த கேள்வியை நிச்சயமற்ற ஒரு மேகத்தின் கீழ் கொண்டு வந்துள்ளன. அதாவது வாக்காளர் அட்டை வைத்திருந்தால் நீங்கள் குடிமகனா? இல்லையா? என்ற சந்தேகம் இன்னும் நீடிக்கிறது.
பிப்ரவரி 12 ம் தேதி, குவஹாத்தி உயர் நீதிமன்றம், 2018-ல் முகமது பாபுல் இஸ்லாம் மற்றும் அசாம் அரசாங்கத்தை மேற்கோள் காட்டி, வாக்காளர் அடையாள அட்டையை குடியுரிமைக்கான சான்றாக கருத முடியாது என்று கூறியது.
முனிந்திர பிஸ்வாஸ் என்பவர் தனது வாக்காளர் ஐடியின் நகலையும், 1997 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் தனது பெயரைக் கொண்ட ஆவணங்கள் அடங்கிய மனுவை தாக்கல் செய்த வழக்கில் நீதிபதிகள் மனோஜித் பூயான் மற்றும் பார்த்திவ்ஜோதி சாய்கியா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியது.
அதாவது வாக்காளர் அட்டை குறித்து நீதிமன்றம் குடியுரிமைக்கான சான்றாக கருத முடியாது என்று கூறியது.
"வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக முகமது பாபுல் இஸ்லாம் மற்றும் அசாம் அரசாங்கம் [WP(C) No. 3547 of 2016] விவாகரத்தில் குடியுரிமைக்கான சான்றாக வாக்காளர் அடையாள அட்டை கருதப்படவில்லை.
மேலும் 1997 க்கு முன்னர் மனுதாரர் வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இருப்பதை நிருபிக்க முடியவில்லை என்றும், மார்ச் 1971 முதல் அவர் அசாமில் தங்கியிருப்பதற்கான ஆதாரங்களை தயாரிக்கத் தவறிவிட்டதாகவும் நீதிமன்றம் கூறியது.
மனுதாரர் 1997 ஆம் ஆண்டுக்கான க்கு முன்னர் வாக்காளர் அட்டை முன்வைக்கத் தவறிவிட்டார். எனவே 25-03-1971 க்கு முன்னர் அவர்கள் வாழ்ந்ததாக மனுதாரர்களால் நிரூபிக்க முடியவில்லை.