பல மணி நேர காத்திருப்புக்கு பின் வேட்பு மனுத்தாக்கல் செய்த அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் 6 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து, இறுதியாக வேட்பு மனுத்தாக்கல் செய்த அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 21, 2020, 07:47 PM IST
  • 2வது பட்டியலில் சுனில் யாதவ் உட்பட 10 வேட்பாளர்களை திங்கள்கிழமை இரவு பாஜக அறிவித்தது.
  • இரண்டாவது மூன்றாவது பட்டியலில் 12 வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தது. காங்கிரஸ் 66 இடங்களிலும் ஆர்ஜேடிக்கு 4 இடங்களிலும் போட்டியிடும்.
  • மொத்தம் 70 சட்டசபை இடங்களில் 67 இடங்களுக்கு பாஜக வேட்பாளர்களை நிறுத்தியது, ஜேடியு-எல்ஜேபிக்கு 3 இடங்களை வழங்கியது.
பல மணி நேர காத்திருப்புக்கு பின்  வேட்பு மனுத்தாக்கல் செய்த அரவிந்த் கெஜ்ரிவால் title=

டெல்லி: டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் 6 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து, இறுதியாக வேட்பு மனுத்தாக்கல் செய்த அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 6 மணி நேரத்திற்கும் மேலாக வேட்பு மனு தாக்கல் செய்ய வரிசையில் நின்றிருந்தார். இதற்கிடையில், கட்சியின் மூத்த தலைவரும், துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா பாஜகவை குறிவைத்துள்ளார். 

பாஜகவை குற்றம் சாட்டியா அவர், "மக்களே! பாஜகவின் சதித்திட்டம் எதுவாக இருந்தாலும், அரவிந்த் கெஜ்ரிவால் வேட்புமனுவை நிரப்புவதை தடுக்க முடியாது. அவர் மூன்றாவது முறையாக டெல்லி முதல்வர் ஆவார்... உங்கள் சதித்திட்டங்கள் வெற்றிபெறாது.' எனக் சாடியுள்ளார்.

வேட்பு மனுக்களை நிரப்ப ஜாம்நகர் மாளிகைக்கு வந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஏற்கனவே அங்கு இருந்த சுயேச்சைகளின் எதிர்ப்பால் 6 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கித் தவித்தார் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். 

அவர் மதியம் 12 மணியளவில் ஜாம்நகர் மாளிகையில் உள்ள டி.எம் அலுவலகத்தை அடைந்தார், ஆனால் சுயேச்சைகள் அவரை உள்ளே நுழைவதைத் தடுத்தனர். அதே நேரத்தில் கெஜ்ரிவாலின் டோக்கன் எண் 45 ஆக இருந்ததால், தனது முறைக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (செவ்வாய்க்கிழமை)மீண்டும் தேர்தல் அதிகாரி அலுவலகத்தை அடைந்து வேட்புமனு தாக்கல் செய்தார். இருப்பினும், ஆறு மணி நேரத்திற்குப் பிறகு அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய முடிந்தது. 

முதல்வர் படிவத்தை பூர்த்தி செய்ய முடியாத வகையில் 35 வேட்பாளர்கள் எந்த ஆவணங்களும் இல்லாமல் அலுவலகத்தை அடைந்ததாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சவுரப் பரத்வாஜ் தெரிவித்தார். இதன் பின்னணியில் பாஜகவும் உள்ளது. படிவத்தை நிரப்ப நேரம் மதியம் 3 மணி வரை இருந்தது. நேற்று (திங்கள்கிழமை) சாலை பேரணியில் தாமதமானதால் கெஜ்ரிவால் அவர்களால் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியவில்லை என்றார்.

புது தில்லி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜகவும் காங்கிரசும் தங்கள் வேட்பாளர்களை நேற்று (திங்கள்கிழமை) அறிவித்தனர். பாஜகவின் சுனில் யாதவ் மற்றும் காங்கிரசின் ரோமேஷ் சபர்வால் ஆகியோர் கெஜ்ரிவாலுக்கு போட்டியாக களம் இறங்குவார்கள். 

டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குபதிவு பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும். டெல்லி சட்டசபையில் 70 இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News