ஏழை மாணவர்களுக்கு 100% உதவித்தொகை; பள்ளிக்கட்டணம் தள்ளுபடி: டெல்லி அரசு அதிரடி

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் தேர்வுக்கட்டணத்தை அடுத்த ஆண்டு முதல் டெல்லி அரசு செலுத்தும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 23, 2019, 09:21 AM IST
ஏழை மாணவர்களுக்கு 100% உதவித்தொகை; பள்ளிக்கட்டணம் தள்ளுபடி: டெல்லி அரசு அதிரடி title=

புதுடெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பெரிய சலுகையை அறிவித்துள்ளது. 

டெல்லி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் சிபிஎஸ்இ தேர்வுக்கட்டணத்தை அடுத்த ஆண்டு முதல் டெல்லி அரசு செலுத்தும் என்ற அறிவிப்பை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (சனிக்கிழமை) கலந்துக்கொண்ட ஒரு நிகழ்ச்சியில் கூறினர். 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் நலன் கருதி, இந்த திட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுக்குறித்து துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா கூறுகையில், “உயர்தர கல்வி கற்பது என்பது அனைத்து குழந்தைகளின் உரிமையாகும். மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தை அரசு செலுத்தும். விரைவில் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு "நீட்" மற்றும் "ஜே.இ.இ." தேர்வுக்கான பயிற்சி அளிக்க அரசு ஏற்பாடு செய்யும். 80 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும், குடும்ப வருமான விதிகளும் நீக்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.

நேற்று தியாகராஜ் ஸ்டேடியத்தில் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி ஒன்று டெல்லி அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சுமார் 1000 மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். மாணவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Trending News