காஷ்மீரில் G20 ... இந்தியாவிற்கு எதிராக விஷத்தை கக்கும் பாகிஸ்தான்!

சர்வதேச அளவில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் இந்த ஆண்டு தலைமையை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், சுற்றுலாத்துறை சார்ந்த பணிக்குழுக் கூட்டம் இன்று ஜம்மு காஷ்மீரில் நடைபெறுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 24, 2023, 10:17 AM IST
  • ஸ்ரீநகரில் நடக்கும் ஜி-20 மாநாட்டில் இந்தியா தவறாகப் பயன்படுத்துகிறது என்கிறார் பிலாவல் பூட்டோ.
  • பிலாவல் தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ளார்.
  • இந்தியா தனது தலைமை பதவியை தவறாக பயன்படுத்திக் கொள்கிறது.
காஷ்மீரில் G20 ... இந்தியாவிற்கு எதிராக விஷத்தை கக்கும் பாகிஸ்தான்! title=

சர்வதேச அளவில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் இந்த ஆண்டு தலைமையை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டங்களுக்கு வெளிநாட்டிலிருந்து அதிகாரிகள் பலர் வருகை தர இருக்கின்றனர். இந்நிலையில் சுற்றுலாத்துறை சார்ந்த பணிக்குழுக் கூட்டம் இன்று ஜம்மு காஷ்மீரில் நடைபெறுகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ, ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜி-20 மாநாட்டை ஏற்பாடு செய்து, இந்த தளத்தை இந்தியா தவறாக பயன்படுத்துகிறது என்கிறார் . பிலாவல் தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ளார். AFP செய்தி நிறுவனத்திற்கு பிலாவல் பேட்டி அளித்துள்ளார். இந்தியா தனது ஜனாதிபதி பதவியை தவறாக பயன்படுத்திக் கொள்கிறது என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் மறக்க முடியாத ஒரு ராஜதந்திர சம்பவம் இது என்று கூறினார். பிலாவல் முன்பு இதே போன்ற விஷயங்களை PoK இன் பிராந்திய சபாவில் கூறியிருந்தார். மே 22 முதல் 24 வரை ஸ்ரீநகரில் ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இருப்பினும், சீனா, துருக்கி மற்றும் சவூதி அரேபியா அதிலிருந்து விலகி இருக்க முடிவு செய்தன.

திமிர் பிடித்த இந்தியா

முசாபராபாத்தில் பிலாவல்,  ‘இந்தியா தனது ஆணவத்தையும் காஷ்மீர் பிரச்சினையையும் சர்வதேச அரங்கில் முன்னிறுத்தத் தயங்குவதில்லை’ ந்ன பிலாவல் புட்டோ கூறியுள்ளார். ஆகஸ்ட் 2019 இல், காஷ்மீரில் 370 வது பிரிவை இந்தியா ரத்து செய்தது. இதனால் கோபமடைந்த பாகிஸ்தான், இந்தியாவுடனான வர்த்தகம் மற்றும் தூதரக உறவை துண்டித்தது. இது ஜி-20 மாநாட்டின் சாதனையாக கருதப்படுகிறது.

காஷ்மீரின் சுதந்திரம் பற்றிய பேச்சு

ஜி 20 தலைவர் பதவியை இந்தியா தனது  அஜெண்டாவை முன்னெடுப்பதற்காக தவறாக பயன்படுத்துகிறது என்று பிலாவல் கூறினார். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மாநாடு நடத்துவதன் மூலம் காஷ்மீரிகளின் குரலை நசுக்க முடியும் என்று இந்திய அரசு நினைத்தால் அது முற்றிலும் தவறு. காஷ்மீர் மக்கள் சுதந்திரம் கோரி வருவதாகவும், காஷ்மீர் மோதலில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு பாகிஸ்தான் துணை நிற்கிறது என்றும் அவர் கூறினார். பிலாவலின் கூற்றுப்படி, ஜி-20 மாநாட்டை நடத்துவதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலகின் 19 முன்னணி பொருளாதார நாடுகளின் பங்கேற்பாளர்களை இந்தியா மிக மோசமான நிலையில் வைத்துள்ளது.

இந்தியா மீது பல குற்றச்சாட்டுகள்

திங்களன்று மாகாண சட்டசபையில் உரையாற்றிய பிலாவல், ஜம்மு காஷ்மீர் ஒரு சர்ச்சைக்குரிய அஜெண்டா என்று குறிப்பிட்டார்.  காஷ்மீரில் வாக்கெடுப்பு பற்றி ஐநா பேசியதாக பிலாவல் கூறியிருந்தார். ஆனால் இந்தியா இன்றும் தனது குடிமக்களுக்கு இந்த உரிமையை வழங்கவில்லை. இன்று இந்தியா காஷ்மீரை ஒரு திறந்த சிறைச்சாலையாக மாற்றியுள்ளது, அங்கு காஷ்மீரிகள் பயத்தின் நிழலில் சுவாசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆயிரக்கணக்கான காஷ்மீரிகள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பலர் காணவில்லை என பிலாவல் குற்றசாட்டுகளை அடுக்கியுள்ளார். பிலாவல் கூறுகையில், இந்தியாவுடன் நல்லுறவை பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால் இந்த உறவு காஷ்மீர் பிரச்சனையில் இருந்து விலகி இருக்காமல் அதைத் தீர்ப்பதன் மூலம் முன்னேற முடியும் என்றார். 

மேலும் படிக்க | என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க! இந்தியப் பிரதமரின் காலில் விழுந்த பப்புவா கினியா பிரதமர்

சர்வதேச மாநாட்டு அரங்கில் ஜி20 கூட்டம்

தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு அரங்கில் ஜி20 கூட்டம் நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட இருக்கிறது. இதில் 60க்கும் அதிகமான சர்வதேச பிரதிநிதிகள், 20 பத்திரிகையாளர்கள் உட்பட பலர் பங்கேற்கின்றனர். ஜி20 கூட்டத்தை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி, பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

சீனாவும், துருக்கியும் பங்கேற்பதில்லை என முடிவு

முன்னதாக, காஷ்மீரில் நடைபெற உள்ள ஜி-20 கூட்டத்தில் சீனாவும், துருக்கியும் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்தன. இரு நாடுகளும் தங்களது உற்ற நண்பரான பாகிஸ்தானின் ஆட்சேபனைக்குப் பிறகு ஜி-20 கூட்டத்தைத் தவிர்க்க முடிவு செய்தன. காஷ்மீர் தொடர்பாக துர்கியே அதிபர் இந்தியாவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். துர்க்கியே காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரிக்கிறார். அதே நேரத்தில் காஷ்மீரின் பெரும் பகுதியை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வருகிறது.

மேலும் படிக்க |  பப்புவா நியூ கினியா சென்ற பிரதமர் மோடிக்கு கிடைத்த வரவேற்பும் விருதுகளும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News