ராகுல் காந்தி அலுவலகம் மீது தாக்குதல்... காரணம் என்ன?

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் வயநாடு அலுவலகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 24, 2022, 07:16 PM IST
  • ராகுல் காந்தி அலுவலகத்தில் தாக்குதல்
  • வயநாடில் இருக்கும் அலுவலகத்தில் திடீரென தாக்குதல் நடந்தது
ராகுல் காந்தி அலுவலகம் மீது தாக்குதல்... காரணம் என்ன? title=

சோனியா காந்தியின் மகனும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியும் உறுதி செய்துள்ளது.  மேலும் தாக்குதல் நடந்தது தொடர்பான வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | பொறியியல் பாடத்திட்டங்களை மாற்றியமைக்க நடவடிக்கை - உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

அந்த வீடியோவில்,  கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் அமர்ந்திருக்கும்போது, வெளியே இருந்து வந்த சிலர் கட்சியினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர். 

 

இந்தச் சம்பவம் குறித்து இளைஞர் காங்கிரஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்.எப்.ஐ.) கொடிகளை ஏந்தியபடி குண்டர்கள் வந்தனர். அவர்கள் ராகுல் காந்தியின் வயநாடு அலுவலகத்தின் சுவர் மீது ஏறி, குதித்து உள்ளே வந்தனர். 

 

கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர்' என கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்த தெளிவான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்தச் சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | கிண்டி கிங்ஸ் மருத்துவமனை விரைவில் கொரோனா சிகிச்சை மையம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News