பா.ஜ.க நிறுவன தினம் இன்று: நமோ ஆப்-ல் பிரதமர் மோடி!

பா.ஜ.க நிறுவன தினமான இன்று நமோ ஆப் மூலம் பாரத பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார்...!

Last Updated : Apr 6, 2018, 08:11 AM IST
பா.ஜ.க நிறுவன தினம் இன்று: நமோ ஆப்-ல் பிரதமர் மோடி! title=

இன்று பா.ஜ.க கட்சியின் 38-வது ஆண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி லோக்சபா எம்.பி.க்-கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் நமோ ஆப் மூலம் கலந்துரையாட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1980-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி பா.ஜ.க கட்சி நிறுவப்பட்டது. இக்கட்சி துவக்கப்பட்டு 38-ம் ஆண்டு தினத்தையொட்டி மஹாராஷ்டிராவில் பிரம்மாண்ட விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொள்கிறார்.

2019-ம் ஆண்டுக்கான பொதுத்தேர்தலை நாடு சந்திக்க உள்ள நிலையில் தேர்தலை எதிர்கொள்ளவும் கட்சியை வலுப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி தனது நமோ (ஆப்) செயலி மூலம் முதல் கட்டமாக வடகிழக்கு டெல்லி எம்.பி.மனோஜ் திவாரி, எம்.பி. மீனாட்சி லெகி, சாரண் எம்.பி. ராஜிவ் பிரதாப் ரூடி, ஹமிபூர் எம்.பி. அணுராக் தாக்கூர், மும்பை எம்.பி. பூனம் மகாஜன் ஆகிய லோக்சபா தொகுதி எம்.பி.க்கள், மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார். 

Trending News