கொரோனாவுக்கு மத்தியில் மற்றொரு கொடூரம்: உச்சியைத் தொடும் விலைவாசி, முழு விவரம் இதோ!!

கொரோனா தொற்றின் பீதிக்கு மத்தியில், பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி விலைகள் அதிகரித்து வருகின்றன. பணவீக்கம் இப்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 

Written by - ZEE Bureau | Last Updated : May 17, 2021, 03:44 PM IST
  • இன்று, ஏப்ரல் மாதத்திற்கான மொத்த பணவீக்கத்திற்கான தரவு வெளியிடப்பட்டது.
  • மொத்த பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது.
  • உணவுப் பொருட்களில் மொத்த பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் குறைந்துள்ளது.
கொரோனாவுக்கு மத்தியில் மற்றொரு கொடூரம்: உச்சியைத் தொடும் விலைவாசி, முழு விவரம் இதோ!!

புதுடெல்லி: கொரோனா தொற்றின் பீதிக்கு மத்தியில், பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி விலைகள் அதிகரித்து வருகின்றன. பணவீக்கம் இப்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மொத்த பணவீக்க விகிதம் (WPI) மார்ச் மாதத்தில் 7.39 சதவீதத்தை எட்டியது. இது கடந்த 8 ஆண்டுகளில் மொத்த பணவீக்க அளவுகளில் மிக அதிகமாகும். இது 2021 பிப்ரவரியில் 4.17 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்த பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் இரட்டை இலக்கத்தை எட்டியது
இன்று, ஏப்ரல் மாதத்திற்கான மொத்த பணவீக்கத்திற்கான தரவு (WPI) வெளியிடப்பட்டது. இது 10.49% ஆக உள்ளது. வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஒரு மாதத்தில் WPI 3.1% அதிகரித்துள்ளது. அமைச்சகத்தின் அறிக்கையின் படி, கச்சா பெட்ரோலியம் (Petrol) மற்றும் கனிம எண்ணெய்களின் விலைகளில் ஏற்பட்ட விலை உயர்வு காரணமாக, பலவித பொருட்களின் மொத்த விலை அதிகரித்து வருகிறது.

விலையுயர்ந்த எரிபொருட்களின் தாக்கம்
எரிபொருள் (Fuel) மற்றும் மின்சாரத்தின் விலைகளின் குறியீடு 20.94 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது இதற்கு முந்தைய மாதத்தில் 10.25 சதவீதமாக இருந்தது. அதாவது இதில் பணவீக்கம் இரண்டு மடங்கை விட அதிகரித்துள்ளது. பெட்ரோலின் பணவீக்க விகிதம் 42.37 சதவீதமாகவும், அதிவேக டீசலின் பணவீக்க விகிதம் 33.82 ஆகவும் உள்ளது.

ALSO READ: வங்கி வாடிக்கையாளர்களுக்கு KYC-யில் நிவாரணம் அளித்தது RBI: விவரம் உள்ளே

இவற்றின் பணவீக்கம் அதிகரித்துள்ளது
WPI குறியீட்டில் பொதுவாக, உற்பத்தி பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அதன் பணவீக்க விகிதம் 7.34% இலிருந்து 9.01% ஆக உயர்ந்துள்ளது. அமைச்சகத்தின் தரவுகளின்படி, உணவுப் பொருட்களில் ஏப்ரல் மாதத்தில் பருப்பு வகைகள், பழங்கள், முட்டை மற்றும் இறைச்சிகளின் மொத்த பணவீக்கம் அதிகரித்துள்ளது. பருப்பு வகைகளின் பணவீக்க விகிதம் 10.74 சதவீதமாகவும், பழங்களின் (Fruits) பணவீக்கம் 27.43 சதவீதமாகவும், பாலின் பணவீக்க விகிதம் 2.04 சதவீதமாகவும், முட்டை-இறைச்சி-மீன் பணவீக்க விகிதம் 10.88 சதவீதமாகவும் இருந்தது. உணவு அல்லாத பொருட்களில் எண்ணெய் விதை பணவீக்க விகிதம் 29.95 சதவீதமாகவும், கனிம விலை விகிதம் 19.60 சதவீதமாகவும், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு பணவீக்க விகிதம் 79.56 சதவீதமாகவும் உள்ளன.

பணவீக்கம் இவற்றில் குறைந்துள்ளது
இருப்பினும், உணவுப் பொருட்களில் மொத்த பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் குறைந்துள்ளது. உதாரணமாக, காய்கறிகளின் பணவீக்க விகிதம் 9.03 சதவீதமாகக் குறைந்துள்ளது. உருளைக்கிழங்கின் பணவீக்க விகிதம் 30.44% குறைந்துள்ளது. வெங்காயத்தின் பணவீக்கம் 19.72% குறைந்துள்ளது. தானியங்களின் பணவீக்கம் 3.32% ஆகவும், நெல் பணவீக்கம் 0.92% ஆகவும் குறைந்துள்ளது. கோதுமையின் பணவீக்க விகிதம் 3.29% ஆக குறைந்துள்ளது.

ALSO READ: Petrol diesel price today May 17: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News