உங்கள் வீட்டு வாசலில் இனி எரிபொருளைப் பெறலாம்: வழங்கத் தயாராகிறது Reliance

RIL தேவை அதிகமாக உள்ள எரிபொருள் விநியோகத்தில் பெரிய அளவில் நுழைய திட்டமிட்டுள்ளது. நிறுவனம் சுமார் 100 மொபைல் டெலிவரி லாரிகளை வாங்கியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 31, 2020, 12:30 PM IST
  • அடுத்த ஆண்டு முதல் உங்கள் வீட்டு வாசலில் எரிபொருளைப் பெறலாம்.
  • ரிலயன்ஸ் உள்ளிட்ட பெரிய நிறுவன்னகள் இதில் ஈடுபடுகின்றன.
  • ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் இதில் பங்களிக்கும்.
உங்கள் வீட்டு வாசலில் இனி எரிபொருளைப் பெறலாம்: வழங்கத் தயாராகிறது Reliance title=

மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) மற்றும் இங்கிலாந்தின் எரிசக்தி நிறுவனமான BP PIc ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான ரிலையன்ஸ் பிபி மொபிலிட்டி லிமிடெட், 2021 ஆம் ஆண்டில் டீசலை வீட்டு வாசலில் விநியோகிக்கும் சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் உருவாக்கப்பட்ட ரிலையன்ஸ் பிபி மொபிலிட்டி, ஜியோ-பிபி பிராண்டின் கீழ் செயல்படும். "RIL தேவை அதிகமாக உள்ள எரிபொருள் விநியோகத்தில் பெரிய அளவில் நுழைய திட்டமிட்டுள்ளது. நிறுவனம் சுமார் 100 மொபைல் டெலிவரி லாரிகளை வாங்கியுள்ளது. அடுத்த ஆண்டு RIL இந்த செயல்பாடுகளைத் தொடங்கும்” ஒரு அதிகாரி கூறினார்.

பெங்களூரு (Bengaluru), நொய்டா, கொல்கத்தா மற்றும் குஜராத்தில் RIL இந்த திட்டத்தை முதலில் தொடங்கவுள்ளது.

இது தொடர்பாக RIL இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

சில்லறை விற்பனை நிலையங்களை 1,400-லிருந்து 5,500 ஆக விரிவுபடுத்தவும் RIL-BP திட்டமிட்டுள்ளது. "பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி (CNG) மொபைல் எரிபொருள் சில்லறை விற்பனையை அரசாங்கம் அனுமதித்தவுடன், ஆர்.ஐ.எல்-பிபி அதற்கும் முயற்சிக்கும்" என்று நிறுவனத்திற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜூலை மாதம், இந்தியன் ஆயில் கார்ப் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உள்ளிட்ட அரசு நடத்தும் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள், தேவைக்கேற்ப எரிபொருளை வழங்க விரும்பும் தொடக்க நிறுவனங்களிலிருந்து EoI-களை கோரின. இதுவரை, 500 க்கும் மேற்பட்ட EoI-கள் பெறப்பட்டுள்ளன.

இருப்பினும், RIL-BP இதில் தனியாகவே இயங்க திட்டமிட்டுள்ளது. எந்த ஸ்டார்ட்-அப் உடனும் கூட்டு வைக்கும் யோசனை இப்போது RIL-BP-க்கு இல்லை.

ALSO READ: 7th Pay Commission latest: பயணப்படியில் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசின் good news

ரோஸ்னெஃப்ட் ஆதரவுடைய நயரா எனர்ஜியும் இந்த பிரிவில் நுழைய திட்டமிட்டுள்ளது. "நயாரா எனர்ஜி தற்போது மொபைல் எரிபொருள் சில்லறை விற்பனையில் ஈடுபடுவதற்கான திறனை ஆராய்ந்து வருகிறது. கலந்துரையாடல்கள் இப்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளன. மேலும் மொபைல் எரிபொருள் சில்லறை தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் தொந்தரவில்லாத வகையில் வழங்கும் ஒரு மாதிரியை வரையறுப்பதற்கான விருப்பங்களை நாங்கள் மதிப்பீடு செய்கிறோம்” என்று மின்னஞ்சல் மூலம் அளித்த பதிலில் நயாரா எரிசக்தி செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் ஆர்வத்தில் அதிகரிப்பு மற்றும் மாறிவரும் நுகர்வு முறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவதில் நிறுவனம் தொடர்ந்து முயன்று வருகிறது.

ரெபோஸ் எனர்ஜி, பெப்ஃபியூல்ஸ், மைபெட்ரோல்பம்ப், ஃபியூயல்படி, மற்றும் ஹம்சாஃபர் உள்ளிட்ட தொடக்க நிறுவனங்கள் (Startup) ஏற்கனவே தேவைக்கேற்ப எரிபொருள் விநியோக சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. "அடுத்த தசாப்தத்தில் இந்தியா மிகப்பெரிய எரிசக்தி நுகர்வு கொண்ட நாடாக இருக்கும். மேலும் எரிபொருள் (Fuel) விநியோக சேனல் ஒரு பிரச்சினையாக மாறுவதை நாங்கள் கவனித்திருக்கிறோம். எங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனமானது அந்த இடைவெளியைக் குறைக்க உதவுகிறது" என்று ரெபோஸ் எனர்ஜியின் இணை நிறுவனர் சேதன் வாலுஞ்ச் கூறினார்.

ALSO READ: இனி வீட்டிலிருந்தே டீசல் ஆர்டர் செய்யலாம்: Door delivery செய்யப்படும்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News