அதிக பொருட்களுடன் பயணிக்கும் விமானப் பயணிகளுக்கு கெட்ட செய்தி! புதிய விதிமுறை விரைவில் அறிமுகம்

இரண்டு மாத இடைவெளிக்கு பின்னர் மே 25 அன்று உள்நாட்டு பயணிகள் விமான சேவைகள் மீண்டும் தொடங்கியபோது விமானத்தில் பயணிப்பவர்கள் அனைவரும் ஒரு செக்-இன் பை மற்றும் ஒரு கைப்பை மட்டுமே கொண்டு ஏற அனுமதிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 24, 2020, 06:15 PM IST
அதிக பொருட்களுடன் பயணிக்கும் விமானப் பயணிகளுக்கு கெட்ட செய்தி! புதிய விதிமுறை விரைவில் அறிமுகம் title=

புதுடெல்லி: விமான பயணத்தின் போது அதிகப்படியான சாமான்களை எடுத்துச் செல்வோருக்கு மோசமான செய்தி உள்ளது. உள்நாட்டு பயணிகள் விமானங்களுக்கு லக்கேஜ் வரம்பை நிர்ணயிக்க விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த தகவல் அதிகாரபூர்வ உத்தரவாக வெளியாகியுள்ளது.  

2020 செப்டம்பர் 23ஆம்  தேதியன்று வெளியிட்ட உத்தரவில், 'விமான நிறுவனங்கள் தங்கள் கொள்கையின்படி, பொருட்கள் எடுத்துச் செல்வதற்கான வரம்பை நிர்ணயிக்க முடியும்' என்று கூறியுள்ளது.தற்போது, கொரோனா தாக்கத்திற்கு முன்னர் செயல்பட்ட விமானங்களில் 60 சதவீத அளவிலேயே இயங்குகின்றன.  

இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு தற்காலிக சர்வதேச விமான சேவை துவக்கப்படும் என்று அண்மையில் மத்திய அரசு அறிவித்தது. சர்வதேச விமானங்களுக்கு  செப்டம்பர் 30 ஆம் தேதி வரை  தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இருதரப்பிலும் சில நிபந்தனைகளுடன் விமானங்களை இயக்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விசா வைத்து இருக்கும் இந்தியர்கள் இந்த நாடுகளுக்கு ஒரு மாத காலத்திற்கு சுற்றுப் பயணம் செய்யலாம். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அல்லாதவர்களும் இந்த நாடுகளில் இருந்து இந்தியா வரலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்த அறிவிப்பை  மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டார். ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஈராக், மாலத்தீவுகள் உள்பட 13 நாடுகளுக்கு இரு தரப்பில் இருந்தும்  விமான சேவை துவங்கும் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த வாரத்தில் ஏர் இந்தியா விமானங்களுக்கு 15 நாட்களுக்கு துபாய் தடை விதித்துள்ளது.  எனவே, அரசு வெளியிட்ட 13 நாடுகளின் பட்டியலில் துபாயின் பெயர் இடம் பெறவில்லை. இந்தியாவில் இருந்து இந்த நாடுகளுக்கு செல்வது மற்றும் அந்த நாடுகளில் இருந்து இந்தியா வருவதற்கு தகுதி பெற்றவர்கள் யார் என்பது குறித்தும் இந்திய விமானப் போக்குவரத்து துறை விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அனைத்து விமான நிறுவனங்களும் ஆன் லைன், ஏஜென்ட்கள் மற்றும் உலக விநியோக முறையில் டிக்கெட்டுகளை விற்பனை செய்யலாம். 

இந்தியாவில் இருந்து ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், கல்ஃப் ஏர் ஆகிய விமானங்கள் இருமார்க்கத்திலும் இருந்து இந்த விமானங்கள் தங்களது சேவையை துவக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Also | Saudi Arabia: அக்டோபர் 4 முதல் Umrah யாத்திரை மீண்டும் படிப்படியாக தொடங்கப்படும்

Trending News