Bank Holiday In August 2022: ஆகஸ்ட் மாதத்தில் 18 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது

Bank Holidays in August 2022: உங்கள் முக்கியமான வேலையை இன்றே செய்து முடிக்கவும், ஆகஸ்டில் 18 நாட்களுக்கு வங்கி மூடப்பட்டிருக்கும், முழுப் பட்டியலைப் பார்க்கவும்

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 29, 2022, 07:41 PM IST
Bank Holiday In August 2022: ஆகஸ்ட் மாதத்தில் 18 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது title=

ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை நாட்கள்: இன்றைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட அனைவரும்  வங்கிக் கணக்கை வைத்துள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில், வங்கி தொடர்பான பணிகளுக்காக, பல நேரங்களில் மக்கள் வங்கிக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆனால் பல சமயங்களில் வங்கிகளுக்கு விடுமுறை விடுவதால், மக்களும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ஆனால், எந்த மாதம், எத்தனை நாட்கள், எப்போது வங்கிகள் மூடப்படும் என்று தெரியாமல் பெரும்பாலான பிரச்னைகளை வங்கி வாடிக்கையாளர்கள் சந்திக்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு மக்கள் பிரச்னைகளை சந்திக்காத வகையில், ரிசர்வ் வங்கியால், ஒவ்வொரு மாதமும் விடுமுறை பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன் அடிப்படையில் ஆகஸ்ட் மாதத்தில் வார விடுமுறை உட்பட 18 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது.  ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை முழு பட்டியலைப் பார்ப்போம்.

ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை பட்டியல்:

- 1 ஆகஸ்ட் 2022: துருபகா ஷீ-ஜி விடுமுறை காரணமாக சிக்கிமில் வங்கிகள் மூடப்படும்

- 7 ஆகஸ்ட் 2022 : முதல் ஞாயிறு விடுமுறை

- 8 ஆகஸ்ட் 2022: முஹர்ரம்  என்பதால் ஜம்மு காஷ்மீரில் வங்கிகளுக்கு விடுமுறை

- 9 ஆகஸ்ட் 2022: முஹர்ரம் விடுமுறை காரணமாக, நாட்டின் தலைநகர் புது டெல்லி, கான்பூர், பெங்களூரு, அகமதாபாத், ஐஸ்வால், ஹைதராபாத், பேலாப்பூர், போபால், சென்னை, அகர்தலா, ஜெய்ப்பூர், ராய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர் , பாட்னா மற்றும் ராஞ்சி வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

- 11 ஆகஸ்ட் 2022: ரக்ஷாபந்தன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்

- 12 ஆகஸ்ட் 2022: ரக்ஷாபந்தன் பண்டிகை காரணமாக, கான்பூர் மற்றும் லக்னோ கரைகளில் விடுமுறை அளிக்கப்படும்.

- 13 ஆகஸ்ட் 2022 : இரண்டாவது சனிக்கிழமை காரணமாக வங்கி விடுமுறை

- 14 ஆகஸ்ட் 2022: ஞாயிற்றுக்கிழமை காரணமாக வங்கிகள் மூடப்பட்டிருக்கும்

- 15 ஆகஸ்ட் 2022: சுதந்திர தினத்தையொட்டி வங்கிகள் இயங்காது

- 16 ஆகஸ்ட் 2022: பார்சி புத்தாண்டு காரணமாக மும்பை மற்றும் நாக்பூரில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

- 18 ஆகஸ்ட் 2022: ஜன்மாஷ்டமி காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்

- 19 ஆகஸ்ட் 2022: ராய்ப்பூர், சண்டிகர், சென்னை, ஜெய்ப்பூர், ஜம்மு, கட்னா, அகமதாபாத், போபால், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர் மற்றும் காங்டாக் ஆகிய இடங்களில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

- 20, ஆகஸ்ட் 2022: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஹைதராபாத்தில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

- 21 ஆகஸ்ட் 2022: ஞாயிற்றுக்கிழமை காரணமாக வாராந்திர விடுமுறையாக இருக்கும்

- 27 ஆகஸ்ட் 2022: நான்காவது சனிக்கிழமை என்பதால் விடுமுறை

- 28 ஆகஸ்ட் 2022: ஞாயிற்றுக்கிழமை காரணமாக வங்கிகள் மூடப்பட்டிருக்கும்

- 29 ஆகஸ்ட் 2022: ஸ்ரீமந்த் சங்கர்தேவ் தினத்தையொட்டி, கவுகாத்தியில் விடுமுறை அளிக்கப்படும்.

- 31 ஆகஸ்ட் 2022: விநாயக சதுர்த்தி காரணமாக மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கர்நாடகாவில் வங்கிகள் இயங்காது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News