டெல்லியில் தொடங்கியது சர்வதேச நாடக விழா 2020!!

டெல்லி தேசிய நாடகப்பள்ளி (National School of Drama) . நிகழ்த்தும் இந்த ஆண்டிற்கான பாரத் ரங் மகோத்ஸவ் என்ற சர்வதேச நாடகவிழா கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தொடங்கியது. 

Last Updated : Feb 3, 2020, 10:54 AM IST
டெல்லியில் தொடங்கியது சர்வதேச நாடக விழா 2020!! title=

டெல்லி தேசிய நாடகப்பள்ளி (National School of Drama) . நிகழ்த்தும் இந்த ஆண்டிற்கான பாரத் ரங் மகோத்ஸவ் என்ற சர்வதேச நாடகவிழா கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தொடங்கியது. 

தேசிய நாடகப் பள்ளி (என்.எஸ்.டி) ஏற்பாடு செய்த 21 வது பாரத் ரங் மஹோத்ஸவ் (பி.ஆர்.எம்), உலகத் தரம் வாய்ந்த நாடகங்கள், ஊடாடும் அமர்வுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளின் கலாச்சார ரீதியாக மாறுபட்ட நிகழ்வுகள் கொண்டிருக்கும். பிப்ரவரி 1 ஆம் தேதி முதல்  நிகழவு  21 வரை நடைபெறும்.

21 நாள்கள் நடைபெறவுள்ள இந்த சர்வதேச நாடக விழாதான் ஆசியாவில் நடைபெறும் மிகப் பெரிய நாடக விழா ஆகும்.

டெல்லியில் நடைபெறும் இந்த விழாவில் 89 நாடகங்கள் மேடையேற்றப்படவுள்ளன. இவற்றில், ஹிந்தி மொழியில் 16 நாடகங்கள், வங்காள மொழியில் 16 நாடகங்கள், கன்னட மொழியில் 5 நாடகங்கள், மராத்தி, ஒடியா, குஜராத்தி, மணிப்பூரி, மலையாளம் ஆகிய மொழிகளில் தலா இரண்டு நாடகங்கள், மைதிலி, தெலுங்கு, நேபாளி, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தலா ஒரு நாடகம் மேடையேற்றப்படவுள்ளது. 

டெல்லியில் தேசிய நாடகப் பள்ளியின் பகுமுக், சகுமுக், திறந்தவெளி அரங்கம், அபிமஞ் ஆகிய அரங்குகளிலும், ஸ்ரீராம் நிகழ் கலை மையம், கமானி அரங்கம் ஆகிய இடங்களிலும் நாடங்கள் நடைபெறவுள்ளன. 

இந்த பாரத் ரங் மகோத்ஸவ் என்ற சர்வதேச நாடகவிழா கணவருபர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் இந்திய உணவு வகைகள், சைனீஸ் உணவு வகைகள், பல்வேறு புத்தகங்கள் ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன. கண்காட்சிக்கு வருபவர்களை கவரும் விதத்தில் நூடுல்ஸ், சூப் வகைகள், இட்லி, சாம்பார், ரசம் அனைத்தும் வழங்கப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமானோர் இந்த பாரத் ரங் மகோத்ஸவ் என்ற சர்வதேச நாடகவிழாவிற்கு வந்தனர்.

Trending News