டெல்லி: மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏக்கள் மற்றும் 50 கவுன்சிலர்கள் இன்று பாஜகவில் இணைந்தார்கள்.
17-ஆம் மக்களவை தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. வரும் 30 ஆம் தேதி மோடி அமைச்சரவை பதவியேற்க உள்ளது. தேர்தல் முடிந்த நிலையிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து பாஜகவில் சேர்ந்து வருகிறார்கள்.
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளையும், பாஜக கட்சி 18 மக்களவை தொகுதிகளையும் கைப்பற்றியது. இந்த மாநிலத்தில் முதன் முறையாக அதிக மக்களவை தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, இம்முறை அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பது மம்தா பானர்ஜிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.
இதுக்குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகி மற்றும் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். மேலும் தோல்விக்கு பொறுப்பேற்று முதலைமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். ஆனால் கட்சி தலைமை ஏற்கவில்லை.
மம்தாவின் கோட்டை எனக் கூறப்பட்ட மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எப்படி தோல்வியாய் தழுவியது என ஆராய்து வரும் நிலையில், அடுத்து பெரும் பின்னடைவாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இன்று டெல்லையில் பாஜக அலுவலகத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏக்களும், 50 கவுன்சிலர்களும், சிபிஎம் கட்சியை சேர்ந்த 1 எம்.எல்.ஏ-வும் பாஜக கட்சியில் இணைந்தனர்.
This is just first phase, says BJP as 2 TMC MLAs, over 50 councillors join party
Read @ANI story | https://t.co/gTjPfRIl8N pic.twitter.com/cC3SuZmAOl
— ANI Digital (@ani_digital) May 28, 2019
மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது 40 திரிணாமுல் எம்.எல்.ஏக்கள் எங்கள் தொடர்பில் இருக்கின்றனர் என பிரதமர் கூறியது பெரும் விவாதத்துக்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.