பாஜக-வில் அதிரடி மாற்றங்கள்: வருண் காந்தி, சுப்பிரமணிய சுவாமி தேசிய செயற்குழுவிலிருந்து நீக்கம்

வருண்காந்தி மற்றும் மேனகா காந்தி போன்ற கட்சியின் பிரபலமான தலைவர்களை கட்சியின் தேசிய செயற்குழுவிலிருந்து கட்சி நீக்கியுள்ளது.

Last Updated : Oct 7, 2021, 03:47 PM IST
பாஜக-வில் அதிரடி மாற்றங்கள்: வருண் காந்தி, சுப்பிரமணிய சுவாமி தேசிய செயற்குழுவிலிருந்து நீக்கம் title=

வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, செயலுத்தி ரீதியான பல முக்கிய முடிவுகளை பாரதிய ஜனதா கட்சி எடுத்து வருகிறது. மிக முக்கியமானதாக கருதப்படும் கட்சி மறுசீரமைப்பை கட்சி மேற்கொண்டுள்ளது.

இதன் கீழ், வருண்காந்தி மற்றும் மேனகா காந்தி போன்ற கட்சியின் பிரபலமான தலைவர்களை கட்சியின் தேசிய செயற்குழுவிலிருந்து கட்சி நீக்கியுள்ளது.

கட்சியின் தேசிய செயற்குழு என்பது, கட்சி எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளை பற்றி கலந்தாலோசித்து முடிவெடுக்க கூடும் ஒரு முக்கிய குழுவாகும். அரசு எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் வருங்காலத்திற்கான திட்டங்களையும் இந்த குழு வடிவமைக்கின்றது.

பிரதமர் மோடி (PM Modi), எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் பியூஷ் கோயல் உட்பட இந்த குழுவில் 80 உறுப்பினர்கள் உள்ளனர். இது தவிர, 50 சிறப்பு கட்சி பிரமுகர்கள் மற்றும் நிரந்தர பிரமுகர்களையும் இந்த குழு கொண்டிருக்கும்.

தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றுதல்களில், மாநிலங்களவை எம்.பி சுப்பிரமணிய சுவாமியும் குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி மீண்டும் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ALSO READ: காங்கிரஸில் இருந்து விலகுவேன்; ஆனால் பாஜகவில் சேர மாட்டேன்: கேப்டன் அமரீந்தர் 

தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு பாஜக பொறுப்பாளர்களை நியமித்தது

செப்டம்பர் 8 ஆம் தேதியன்று, பாஜக தலைவர் ஜேபி நட்டா, தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் இணை பொறுப்பாளர்களை நியமித்தார்.  கோவா, மணிப்பூர், உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் இணை பொறுப்பாளர்களை நியமிக்கப்பட்டனர்.

மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. மேலும், மக்களவை எம்.பி. சஞ்சய் பாடியா, பிகார் எம்.எல்.ஏ சஞ்சீவ் சவுராசியா, பாஜக தேசிய செயலாளர் சத்ய குமார், சுதீர் குப்தா, கட்சியின் தேசியச் செயலாளர் அரவிந்த் மேனன் மற்றும் சுனில் ஓஜா ஆகியோர் மேற்கு உத்தர பிரதேசம், ப்ரஜ், அவத், கான்பூர், கோரக்பூர் மற்றும் காஷி ஆகிய இடங்களில் தேர்தல் பொறுப்பாளர்களாக இருப்பார்கள்.

இதற்கிடையில், பாஜக-வின் (BJP) முக்கிய பிரமுகர்களான மேனகா காந்தி, வருண் காந்தி, சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் தேசிய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அரசுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவாக வருண் காந்தி பதிவு செய்த ட்வீட்டும் இந்த நீக்கத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

ALSO READ: Pandora Papers: முறைகேடான நிதி முதலீடுகளில் சச்சின் உள்ளிட்ட பல இந்தியர்கள்..!!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News