கடந்த 2015 ஆம் ஆண்டு, முறைகேடான நிதி முதலீடுகளை அம்பலப்படுத்திய பனாமா ஆவணங்கள் (panama papers) உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவில் இருக்கலாம். அந்த வகையில் தற்போது பண்டோரா ஆவணங்கள் என்பாடும் பண்டோரா பேப்பர்ஸ் (Pandora Papers) ஆவணங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உலக அளவில் முறைகேடாக வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் முதலீடு செய்து, சொத்துக்களை வாங்கி குவித்துள்ள பிரபலங்கள் தொடர்பான பட்டியல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) உட்பட பலரது பெயர்களும் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு (International Consortium of Investigative Journalists -ICIJ) இந்த பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. நிதி சேவை வழங்கும் 14 நிறுவனங்களிடம் இருந்து கசிந்த 11.9 மில்லியன் ரகசிய ஆவணங்களை 600க்கும் அதிகமான பத்திரிகையாளர்கள் புலனாய்வு செய்து இந்த பட்டியலை வெளியிட்டுள்ளனர். இந்த பட்டியலில், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் முறைகேடான வகையில் சொத்துக்களை குவித்துள்ளது தெரிய வந்துள்ளது. வரி ஏய்ப்பு செய்து சொத்துக்களை வாங்கி குவித்துள்ளவர்கள் பட்டியலில் 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | வங்கி லாக்கர் புதிய விதிகள்; 'இந்த' காரணத்திற்காக லாக்கரை வங்கிகள் உடைக்கலாம்..!!
இந்தியாவின் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் (Sachin Tendulkar), ரிலையன்ஸ் ADAG தலைவர் அனில் அம்பானி (Anil Ambani)மற்றும் பயோகான் (Biocon)நிறுவனத்தின் தலைவர் கிரண் மசும்தார் ஷா (Kiran Mazumdar Shaw) ஆகியோர் பெயர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
உலக அளவில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பெயரும் முறைகேடாக நிதி முதலீடு செய்து, சொத்துக்களை குவித்துள்ளவர்கள் பட்டியலில் உள்ளது. இது தவிர ICIJ அமபலப்படுத்திய பெயர்களில், ஜோர்டான் மன்னர், உக்ரைன், கென்யா மற்றும் ஈக்வடார், செக் குடியரசின் பிரதம மந்திரி மற்றும் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயர் ஆகியோர் பெயர்கள் உள்ளன. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் "அதிகாரப்பூர்வமற்ற பிரச்சார அமைச்சர்" மற்றும் ரஷ்யா, அமெரிக்கா, துருக்கி மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த 130 க்கும் மேற்பட்ட பணக்காரர்களின் முறைகேடா நிதி முதலீடுகளை ரகசிய கோப்புகள் அம்பலப்படுத்துகின்றன.
ALSO READ | ரயில் பயணிகளுக்கு டிக்கெட் உடன் கிடைக்கும் முக்கிய வசதிகள்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR