சூடு பிடிக்கும் பீகார் வாக்கு எண்ணிக்கை: பரபரப்பு இரு பக்கம், வெற்றி யார் பக்கம்?

கிட்டத்தட்ட அனைத்து கருத்துக் கணிப்புகளும் RJD தலைமையிலான கூட்டணி நிதீஷ்குமாரிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்றும் என்று கணித்திருந்தன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 10, 2020, 02:47 PM IST
  • பீகாரில் ஆரம்பகட்ட போக்குகள் நிதீஷ்குமார் தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஒரு ஆதாயத்தை காட்டுகின்றன.
  • வாக்கு எண்ணிக்கை இதுவரை தடையில்லாமல் நடந்து வருகிறது.
  • இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.
சூடு பிடிக்கும் பீகார் வாக்கு எண்ணிக்கை: பரபரப்பு இரு பக்கம், வெற்றி யார் பக்கம்? title=

பாட்னா: பீகார் தேர்தல் முடிவு 2020 இன் ஆரம்பகட்ட போக்குகள் நிதீஷ்குமார் (Nitish Kumar) தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஒரு ஆதாயம் இருப்பதை காட்டும் அதே வேளையில், இந்தியாவின் தேர்தல் ஆணையம் வாக்குகளை எண்ணுவது 35 சுற்றுகள் வரை செல்லக்கூடும் என்று கூறியுள்ளது. இன்று மாலைக்குள் இறுதி கட்ட முடிவுகள் வரக்கூடும் என இதிலிருந்து தெளிவாகிறது.

இரு வேட்பாளர்களிடையே வாக்கு வித்தியாசம் 500 வாக்குகளுக்கும் குறைவாக உள்ள 60 க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. “சுமார் 4.10 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை 92 லட்சம் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. முன்னதாக 25-26 சுற்று எண்ணிக்கைகள் பயன்படுத்தப்பட்டன. இந்த முறை அது சுமார் 35 சுற்றுகள் வரை சென்றது. எனவே எண்ணிக்கை மாலை வரை தொடரும்” என்று பீகார் தலைமை தேர்தல் அதிகாரி (CEO), எச்.ஆர். சீனிவாஸ் செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ-யிடம் தெரிவித்தார்.

எனினும் சிறிது நேரம் கழித்து தேர்தல் ஆணையம் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், “வாக்கு எண்ணிக்கை இதுவரை தடையில்லாமல் நடந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன” என்று தெரிவித்தது.

ALSO READ: பீகார் தேர்தல் முடிவுகள் 2020: 42 இடங்களில் 500 வாக்கும், 74 இடங்களில் 1000 வாக்கும் வித்தியாசம்

பீகாரில் (Bihar) 38 மாவட்டங்களில் 55 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. ஆரம்பகட்ட போக்குகள் நிதீஷ்குமார் தலைமையிலான BJP-JDU கூட்டணி 126 இடங்களிலும் ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி 107 இடங்களிலும் முன்னணியில் இருப்பதைக் காட்டியது. இருப்பினும், 60 க்கும் மேற்பட்ட இடங்களில் வித்தியாசம் 500 வாக்குகளுக்கும் குறைவாக இருந்தது. இது சமீபத்திய காலங்களில் மிக நெருக்கமாகப் போட்டியிடப்பட்ட மாநிலத் தேர்தல்களில் ஒன்றாகும்.

மகாகட்பந்தனின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் இந்த அறிக்கை எழுதும் நேரத்தில் ராகோபூர் தொகுதியில் இருந்து முன்னிலை வகித்தார். இருப்பினும், பீகாரில் பிரசித்தி பெற்ற பப்பு யாதவ் மாதேபுரா தொகுதியில் பின்தங்கியிருந்தார். மொகாமாவில், பாகுபலி தலைவரும், ஆர்ஜேடி (RJD) வேட்பாளருமான அனந்த் சிங்கும் முன்னிலை வகித்தார். ஜமுயியில், ஆரம்ப போக்குகளில் பாஜக வேட்பாளர் ஸ்ரேயாசி சிங் முன்னணியில் இருந்தார். இதுவரை இருபத்தைந்து சதவீத வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன.

இருப்பினும், ஆரம்பகட்ட போக்குகள் வெளிவந்த பின்னர் பாஜக-ஜேடியு முகாமில் மனநிலை உற்சாகமாக இருந்தது. கிட்டத்தட்ட அனைத்து கருத்துக் கணிப்புகளும் RJD தலைமையிலான கூட்டணி நிதீஷ்குமாரிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்றும் என்று கணித்திருந்தன. அப்படியிருக்க இப்போது வெளிவரும் வாக்கு எண்ணிகையின் போக்குகள் கண்டிப்பாக பாஜக-ஜேடியு முகாமில் புதிய உற்சாகத்தை கிளப்பியுள்ளது.

15 ஆண்டு நிதீஷின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்கள் வாக்குகளாக மாறுமா அல்லது தேஜஸ்வி (Tejashwi Yadav) என்ற இளைய தலைவருக்காக பீகார் காத்திருக்கிறதா என்பது கூடிய விரைவில் தெரிய வரும்.

ALSO READ: பிறந்தநாள் பரிசாக தேஜஸ்விக்கு மக்கள் முதல்வர் பதவியை அளிப்பார்கள்: RJD நம்பிக்கை

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News