பிபார்ஜாய் 'மிகக் கடுமையான சூறாவளி புயலாக' மாறும்! IMD எச்சரிக்கை!

பிபர்ஜாய் புயல் அடுத்த மூன்று நாட்களில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வடக்கு-வடகிழக்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 11, 2023, 09:52 AM IST
  • சூறாவளி புயல் 'Biparjoy' அடுத்த 6 மணி நேரத்தில் மிகக் கடுமையான சூறாவளி புயலாக மாறும்.
  • பிபர்ஜாய் புயல் தற்போது போர்பந்தரில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ளது.
  • பிபர்ஜாய் புயல் வடக்கு நோக்கி நகர்கிறது
பிபார்ஜாய் 'மிகக் கடுமையான சூறாவளி புயலாக' மாறும்! IMD எச்சரிக்கை! title=

பிபர்ஜாய் சூறாவளி (Biporjoy Cyclone), அடுத்த 6 மணி நேரத்தில் மிகக் கடுமையான சூறாவளி புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரித்துள்ளது . இருப்பினும் குஜராத் கடற்கரையை தாக்கும் வாய்ப்பு குறைவு என்று கூறியுள்ளது நிம்மதி அளிக்கும் செய்தி ஆகும். பிபர்ஜாய் புயல் போர்பந்தர் கடற்கரையிலிருந்து 200-300 கி.மீ தொலைவில் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் குஜராத்தில் ஜூன் 15 வரை இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு உள்ளது. மிகக் கடுமையான சூறாவளி புயல் 'Biparjoy' அடுத்த 12 மணி நேரத்தில் மிகவும் தீவிரமான சூறாவளி புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது

பிபர்ஜாய் புயல்  மையம் கொண்டுள்ள பகுதி

பிபர்ஜாய் புயல் அடுத்த மூன்று நாட்களில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வடக்கு - வட கிழக்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அகமதாபாத் வானிலை ஆய்வு மைய இயக்குநர் மனோரமா மொஹந்தி கூறியதாவது: பிபர்ஜாய் புயல் தற்போது போர்பந்தரில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ளது. அது மேலும் நகரும் போது, ​​போர்ட் சிக்னல் எச்சரிக்கைகள் அதற்கேற்ப மாறும்.

பிபர்ஜாய் குஜராத் கடற்கரையை தாக்குமா?

பிப்ஜாய் புயல் போர்பந்தரில் இருந்து 200-300 கிமீ தொலைவிலும், கட்ச்சில் உள்ள நலியாவிலிருந்து 200 கிமீ தொலைவிலும் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய கணிப்பைப் பொருத்தவரை, பிபர்ஜோய் குஜராத் கடற்கரையைத் தாக்க வாய்ப்பில்லை. அடுத்த 5 நாட்களுக்கு அதாவது ஜூன் 15 ஆம் தேதி வரை மீனவர்கள் அரபிக்கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது என்றார் அவர். அனைத்து மீன்பிடி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலையில் 2 ஜாக்பாட் செய்திகள் கிடைக்கும், காத்திருக்கும் ஊழியர்கள்

வடக்கு நோக்கி நகரும் பிபர்ஜாய் 

பிபர்ஜாய் புயல் வடக்கு நோக்கி நகர்கிறது என்றும் மொஹந்தி கூறினார். இதன் வேகம் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு திசையை நோக்கி மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு, புயலின் திசை வடக்கு - வடமேற்கு நோக்கி இருக்கும். ஜூன் 15ம் தேதி வரை குஜராத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். குறிப்பாக சவுராஷ்டிரா-கட்ச் பகுதியில் காற்றின் வேகம் பலமாக இருக்கும்.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில்  உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, கடந்த ஜூன் 6ம் தேதி அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே இடத்தில் மையம் கொண்டிருந்தது. பின்னர் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு 'பிபர்ஜாய்' என பெயரிடப்பட்டுள்ளது. ‘பிபர்ஜாய்’ என்ற பெயரை வங்கதேசம் பரிந்துரைத்தது. இதற்கு ஆங்கிலத்தில் 'Calamity' அல்லது 'Disaster' என்று பொருள். அதாவது பேரழிவு, பேரிடர் என்று அர்த்தம். புயல் எச்சரிக்கை காரணமாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். தற்போது இந்த புயல் மும்பைக்கு சுமார் 600 கிலோமீட்டர் மேற்கிலும், கராச்சிக்கு தெற்கே 830 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருக்கிறது. 

மேலும் படிக்க | பசையால் பறிபோன பார்வை... சொட்டு மருத்து போடும் கவனமாக இருங்க மக்களே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News