டெல்லி தேர்தல்: 57 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்த பாஜக; முழு விவரம்

டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான 57 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தது பாரதீய ஜனதா கட்சி.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jan 17, 2020, 06:37 PM IST
டெல்லி தேர்தல்: 57 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்த பாஜக; முழு விவரம்
File photo

புது டெல்லி: டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் பெயர்களை பாரதீய ஜனதா அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே 70 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது. பிப்ரவரி 8 ஆம் தேதி டெல்லியில் வாக்குப்பதிவு நடைபெறும். 11 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 57 வேட்பாளர்களின் பெயர்களை பாரதீய ஜனதா அறிவித்துள்ளது. எஸ்சி பிரிவைச் சேர்ந்தவர்கள் 11 பேர், 4 பெண்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த கபில் மிஸ்ராவுக்கும் பாஜக சார்பில் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் மனோஜ் திவாரி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்தார். மீதமுள்ள இடங்களும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறினார். மேலும் இந்த முறை டெல்லியில் பாஜக முழுமையான பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்கும் என்றும் மனோஜ் திவாரி கூறினார்.

 

நேற்று (வியாழக்கிழமை) உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான மத்திய தேர்தல் குழு கூட்டத்தில், இந்த வேட்பாளர்களின் பெயர்கள் முடிவு செய்யப்பட்டதாக மனோஜ் திவாரி தெரிவித்தார். அந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, நிர்வாகத் தலைவர் ஜே.பி.நட்டா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இன்னும் 13 இடங்களுக்கான வேட்பாளர்களை விரைவில் அறிவிக்கப்படுவார்கள் எனவும் பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லி சட்டமன்றத்தில் மொத்தம் 70 இடங்கள் உள்ளன. 

ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே 70 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது. பிப்ரவரி 8 ஆம் தேதி டெல்லியில் வாக்குப்பதிவு நடைபெறும், 11 ஆம் தேதி முடிவுகள் வெளியாகும். தேசிய தலைநகரில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது. மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி கட்சி அதிகாரத்தைப் பெற முயற்சிக்கிறது. அதேநேரத்தில் பாஜகவும் காங்கிரசும் ஆட்சி அமைக்கும் நோக்கத்தில் வியூகம் வகுத்து வருகிறது. 

BJP list

BJP list

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.