முதல் முறையாக, பாலிவுட் நட்சத்திரங்களும் அயோத்தியில் நடைபெறும் பிரமாண்டமான ராம்லீலா கொண்டாட்டங்களில் கலந்துக் கொள்கின்றனர். ஸ்ரீராமர் ஜனித்த இடத்தில் அவரது வாழ்க்கையை சொல்லும் இந்த பிரபலமான ராம்லீலா நாடகங்களில் நாள்தோறும் புதிய கதாபாத்திரங்களும், பிரபல நட்சத்திரங்களும் பங்கேற்று கலக்குகிறார்கள். அவற்றில் சில புகைப்படங்கள்…
டெல்லி பாஜக பிரிவுத் தலைவர் மனோஜ் திவாரி திங்களன்று தனது கட்சி நகர-மாநிலத்தை ஷாஹீன் பாக்-காக (அமைதித் தோட்டமாக) மாற்ற விரும்புகிறது, அதே நேரத்தில் போட்டியாளர்கள் டெல்லி முழுவதையும் ஷாஹீன் பாக் ஆக்குவதற்கு விரும்புகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
ரபேல் விவகாரத்தில் டசால்ட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி எரிக் டிராபியர் கூறிய அறிக்கை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் முகத்தில் அறைந்தது போல உள்ளது என டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.
டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரியின் வீடு நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்களால் சூறையாடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் போது மனோஜ் திவாரி தாக்குதலுக்கு உள்ளான வீட்டில் இல்லையென்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் வட்டாரங்கள், திவாரிக்கு கீழ் பணி புரியும் ஒருவர் கார் விபத்து சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், எதிர் தரப்புக்கும் திவாரியின் பணியாளர் தரப்புக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதையடுத்து, எதிர்தரப்பினர் அவருடைய நண்பர்களுடன் திவாரியின் வீட்டை சூறையாடியுள்ளனர்.
இது குறித்து திவாரி அவரது டிவிட்டரில்:-
டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ வேட் பிரகாஷ் சதீஷ் இன்று பா.ஜ.காவில் இணைந்தார்.
இதுகுறித்து வேட் பிரகாஷ் சதீஷ் கூறியதாவது:-
ஆம் ஆத்மி கட்சியில் இருந்தபோது மூச்சுத்திணறியது போல நான் உணர்ந்தேன். சட்டசபைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை ஆம் ஆத்மி நிறைவேற்றவில்லை. அர்விந்த் கெஜ்ரிவால் எப்பொழுதும் பிரதமர் மோடியை குறைக்கூறி கொண்டு இருப்பது தான் வேலை. அக்கட்சியில் உள்ள 30-35 எம்.எல்.ஏ-க்களும் கட்சித்தலைமையின் கீழ் மகிழ்ச்சியின்றி உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.